மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தருடன் நெல்லை கவிநேசன்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தருடன் நெல்லை கவிநேசன்



 
தேசிய வாசிப்பு இயக்கம், தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் ”நெல்லை புத்தக திருவிழா-2019” திருநெல்வேலி, வண்ணார்பேட்டை சகுந்தலா சுமங்கலி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. 

23.4.2019 ன்று புத்தக தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர்.கா.பிச்சுமணி கலந்துகொண்டு ஷேக்ஸ்பியர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

 தினத்தந்தி நாளிதழ் செய்தி

 

தினமலர்  நாளிதழ் செய்தி
வந்திருந்தவர்களை வாசிப்பு இயக்கச் செயலர் முனைவர் திரு.கா.சரவணக்குமார் வரவேற்றார். எழுத்தாளர் நெல்லை செல்வம் எழுதிய ‘சின்னச்சின்னக் கண்ணிலே’ என்ற நூலை கவிஞர். முனைவர். திரு.கோ.கணபதி சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தி பேசி, பாரதி கருத்து பாரெல்லாம் பரவிட பாரதிய சிந்தனையில் சான்றிதழ், பட்டயப் படிப்பு பல்கலையில் தொடங்க வேண்டும் என்று துணைவேந்தரிடம் வேண்டுகோள் வைத்து பேசினார்.

ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர் நெல்லை கவிநேசன் சிறப்புரையாற்றினார். 
 
பல்கலைக்கழக நூலகர் முனைவர் திரு.பாலசுப்பிரமணியன் கருத்துரை வழங்கினார். திரு.நெல்லை செல்வம் எழுதிய சின்னச் சின்னக்கண்ணிலே நூலை துணைவேந்தர் வெளியிட எழுத்தாளர் நாறும்பூநாதன் பெற்றுக்கொண்டார். கவிஞர். திரு.சிற்பி பாமாதான் எழுதிய மனிதனின் மறுபக்கம் என்ற நூலை துணைவேந்தருக்கு வழங்கினார். விழாவில் ஆதித்தனர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர். பேரா.முனைவர் கதிரேசன், நல்நூலகர் முனைவர் அ.முத்துகிருஷ்ணன், மயூரி ஆறுமுக நயினார், வாசிப்பு இயக்கத் தலைவர் திரு.தம்பான், ஆசிரியர் இயக்கத் தலைவர் இராஜசேகர், சிவப்பிரகாசர் நற்பணி மன்றத்துணைச் செயலர் திரு.சு.முத்துசாமி, பிரிட்டோ மற்றும் பலர் கலந்து கொண்டனர். வாசிப்பு இயக்க பொருளாளர் திரு.பாலாஜி நன்றி கூறினார். ஸ்ரீராம் அகாடமி மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது.


1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News