வேலை நம் கையில்


புத்தகத்தைப்பற்றி…

பேராசிரியர் நெல்லை கவிநேசன் எழுதிய “வேலை நம் கையில்” என்னும் புத்தகம் இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி ஆகும். தங்கள் குறைகளையும், நிறைகளையும் தெரிந்துகொண்டு, தங்கள் விருப்பத்தையும் மனதில்கொண்டு இன்றைய இளைஞர்கள் அவர்களாகவே தங்கள் எதிர்காலத்தை முடிவு செய்யவேண்டும் என்ற கருத்தை இந்த புத்தகம் வலியுறுத்துகிறது. நடைமுறையில் உள்ள உதாரணங்களைக்கொண்டு அழகாக இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
 

படிப்பு என்பது இளைஞர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், தங்கள் திறமைகளில் நம்பிக்கைக்கொண்டு தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவும் அடித்தளமாக அமைய வேண்டும் என்ற நல்ல கருத்தை இந்த புத்கதம் உள்ளடக்கி உள்ளது.
 
மேலும், மாணவ-மாணவிகளின் வெற்றிக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பங்கு மிகவும் அவசியமானது என்று அழுத்தமாக இந்தப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
 
(நூல் மதிப்புரையில் சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எப்.லடிஸ்லாஸ் ரோட்ரிகோ)

Post a Comment

புதியது பழையவை

Sports News