சாலை பாதுகாப்பு வார விழாவில் - எமதர்மன் வேடத்தில் ஆடிட்டர்...

சாலை பாதுகாப்பு வார விழாவில்
எமதர்மன் வேடத்தில் ஆடிட்டர்...


சமீபத்தில் மதுரை கோரிபாளையத்தில் மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் “சாலை பாதுகாப்பு வார விழா” நடைபெற்றது. இதில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், ஓட்டுநர்களுக்கான கண் சிகிச்சை முகாம் ஆகியவை நடத்தப்பட்டன.

ஆடிட்டர் தவமணி
 

 மதுரை கோரிப்பாளையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைக்குழு சார்பில் நடைபெற்ற நிகழ்வில், மதுரை ஆடிட்டர் தவமணி எமதர்ம ராஜா வேடம் அணிந்து, ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களை எச்சரித்தார். சாலையோரத்தில் எமதர்மனைபோல நின்றுகொண்டு “செல்போன் பேசிக்கொண்டே சாலையைக் கடந்தால் உங்களை நான் பிடித்துச் சென்றுவிடுவேன்” என்று மைக்மூலம் எச்சரித்தார். எமதர்மன் வேடத்தில் நூதன பிரச்சாரம் செய்தது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை கவர்ந்தது.


 

‘எமதர்ம ராஜா’ மற்றும் இரண்டு ‘கிரண்கள்’ வேடமணிந்த மூவர்குழு ஹெல்மட் மற்றும் ஷீட் பெல்ட் அணியாதவர்களை எச்சரித்தது. நடந்து செல்வோரின் பாதுகாப்புப்பற்றியும் எமதர்ம ராஜா ஒலிபெருக்கியில் விளக்கம் அளித்தார்.

மதுரை மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், கீழவாசல் போன்ற இடங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வத்தோடு நின்று இந்த நிகழ்ச்சியைக் கவனித்தார்கள்.

காவல் ஆணையர்

மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் இந்த நிகழ்வை தொடங்கி வைத்தார். துணை காவல் ஆணையர் (போக்குவரத்து) அருண் பாலகோபாலன், உதவி ஆணையர் ஜோசப் நிக்சன், ரவிச்சந்திரன், ஜி.ஆர்.பாலகிருஷ்ணன், தலைமைப் போக்குவரத்து காப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தார்கள். இந்தநிகழ்ச்சியினை மாநகர போக்குவரத்து காவல்துறையும், தமிழ்நாடு போக்குவரத்து டிராபிக் வார்டர்களும் ஏற்பாடுகள் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

புதியது பழையவை

Sports News