திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி முதல்வருக்கு பல்கலைக்கழக மகளிர் சாதனையாளர் விருது

திருச்செந்தூர் 
கோவிந்தம்மாள் ஆதித்தனார் 
கல்லூரி முதல்வருக்கு
பல்கலைக்கழக மகளிர் சாதனையாளர் விருது

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் மகளிர் மேம்பாடு மற்றும் மகளிர் கல்வி மையத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல்கலைக்கழக அளவில் மிகச்சிறந்த கல்வியாளர்களுக்கு “மகளிர் சாதனையாளர் விருது-2019” வழங்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தோடு இணைந்த கல்லூரிகளில் பணியாற்றும் முதல்வர் மற்றும் ஆசிரியர்களில் மிகச்சிறந்த முறையில் கல்வி மற்றும் சமுதாயப் பணி ஆற்றிய பேராசிரியைகளுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர்.பி.ஜெயந்தி ஜெயபாஸ்கரன் அவர்களுக்கு “மகளிர் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. 

உலக அளவில் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளராகவும், பல ஆண்டுகளாக கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றும் டாக்டர்.பி.ஜெயந்தி ஜெயபாஸ்கரன் அவர்கள் மகளிர் முன்னேற்றத்திற்காக சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டமைக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.