மேடையில் பேசுவது எப்படி?-சிறப்பு பயிலரங்கத்தில் நெல்லை கவிநேசன்

மேடையில் பேசுவது எப்படி?
சிறப்பு பயிலரங்கத்தில் 
நெல்லை கவிநேசன்  



திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தமிழ்துறை சார்பில், “மேடையில் பேசுவது எப்படி?” என்னும் சிறப்பு பயிலரங்கம் நடந்தது. இதில் நெல்லை பாரதி உலகப் பொதுமன்றத்தின் செயலரும், சங்கர்நகர் மேல்நிலைப்பள்ளி முதுநிலை தமிழாசிரியருமான டாக்டர்.கணபதி சுப்பிரமணியம், ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் ஆகியோர் மேடையில் பேசும் உத்திகளை எடுத்துக்கூறியதுடன், மாணவர்களை பேச வைத்து பயிற்சியும் அளித்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர் டாக்டர்.மகேந்திரன் தலைமை வகித்து, பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார். 




தமிழ்த்துறை தலைவர் டாக்டர்.கதிரேசன் வரவேற்று பேசினார். கல்லூரி முன்னாள் மாணவரும், ஓய்வுபெற்ற நெல்லை பேராசிரியருமான முத்துச்சாமி சிறப்புரை ஆற்றினார். இதில், அலுவலக கண்காணிப்பாளர் ராஜன் ஆதித்தன், பேராசிரியர்கள் தர்மபெருமாள், சிவமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 70 மாணவர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கல்லூரி முதல்வர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தமிழ்த்துறை பேராசிரியை டாக்டர்.எழிலி வரவேற்று பேசினார். உதவி பேராசிரியர் டாக்டர்.ராஜேஷ் நன்றி கூறினார். உதவிப்பேராசிரியர் மகேசுவரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை தலைவர் செய்திருந்தார். 


Post a Comment

புதியது பழையவை

Sports News