Header Ads

நெல்லை ஹலோ FM -ல் “அம்மாவும், நானும்” திறமைத் திருவிழா

நெல்லை ஹலோ FM -ல் “அம்மாவும், நானும்” 
திறமைத் திருவிழாநெல்லையில் ஹலோ FM -ன் ‘அம்மாவும்-நானும்’ அம்மா மகளுக்கான கொண்டாட்ட நிகழ்ச்சி வித்தியாசமான போட்டிகள் மற்றும் பிரம்மாண்ட பரிசுகளுடன் நடைபெற்றது.

உறவுத் திருவிழா
தமிழகத்தின் முன்னணி பண்பலை வானொலியான ஹலோ எப்.எம். 106.4 சார்பில்  “அம்மா-மகள்” உறவைக் கொண்டாடும் வகையில் ‘அம்மாவும் நானும்’ எனும் திறமைத் திருவிழா வெள்ளிக்கிழமை நெல்லை டவுன் பார்வதி சேஷ மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டார்கள்..
சிறப்பு விருந்தினர்கள்
ஹலோ எப்.எம்.106.4 சார்பில் 16 வயதிற்கு மேற்பட்ட மகள்கள், தங்களது அம்மாவுடன் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திறமை திருவிழா, வெள்ளிக்கிழமை காலை10.30 மணி அளவில் தொடங்கியது. விழாவில் உலகின் அதிகபட்ச ஐ.க்யூ கொண்ட ஐந்து உலக சாதனைகள் படைத்த நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த கே.விசாலினி மற்றும் அவரது தாயார் ராகமாலிகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு “பெண்கள் சாதிக்க ஒரு வீட்டில் அம்மா மகள் என்ற உறவில் இருக்க வேண்டிய புரிதல்” பற்றின அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். அவர்களோடு இணைந்து ஹசீனா செய்யது, அனிஷா பாத்திமா, மீனா சுரேஷ், உமா இளங்கோவன், ப்ரியா கார்த்திக் ஆகிய நெல்லையை சேர்ந்த பல்துறை பிரபலங்களும் நடுவர்களாக பங்கேற்று குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.அன்பென்றால் அம்மா
ஹலோ எப்.எம் நிலைய மேலாளர் சகாயராஜ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பாளை வேதிக் வித்யாசரம் 11ஆம் வகுப்பு மாணவி செல்வி ரசிகா வரவேற்பு நடனம் பரதநாட்டியம் ஆடினார். தொடர்ந்து அம்மாவும், மகளும் இணைந்து நடனமாடும் “ஜோடி நடனம்” நிகழ்ச்சியை ஆர்.ஜே.வெங்கட்ராமன் தொகுத்து வழங்கினார்.அடுத்த போட்டி அம்மாவும் மகளும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் பாடும் “சிங்கிங் ஸ்டார்” அதை ஆர்.ஜே. அற்புதராஜ் மற்றும் ஆர்.ஜே.சீதா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.மகள்கள் அவர்களது அம்மா பற்றி கவிதைகள் எழுதும் “அன்பென்றாலே அம்மா” நிகழ்ச்சியை ஆர்.ஜே மகேந்திரன் தொகுத்து வழங்கினார். டபுள்ஸ் போட்டி என்ற அம்மாவும் மகளும் ஒரு தலைப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசும் போட்டியில் ஆர்.ஜே.மணிகண்டன் உடன் பேசி கலக்கினார்கள். அதே போல் நம்ம ஊர் பேரழகி என்ற போட்டியை ஆர்.ஜே.சாமி தொகுத்து வழங்க நடுவராக colors தமிழ் தொலைக்காட்சி நடிகை நேத்ரா கலந்து கொண்டு சிறப்பித்தார்.மேலும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
சவாலுக்கு ரெடியா?
ப்ரீத்தி ஸோடியாக் 2.O வழங்கிய “சவாலுக்கு ரெடியா” மற்றும் “சாப்பிங் ராணி” எனும் காய்கறி வெட்டும் போட்டியும் ப்ரீத்தி உபகரணங்களை வைத்து நடைபெற்றது.இந்த இரண்டு போட்டியையும் ஆர்.ஜே செல்வா நடத்தினார். ஹெலத்தி ஸ்னாக்ஸ் சமையல் போட்டியை ஆர்.ஜே.ஜெய கல்யாணி தொகுத்து வழங்கினார்.

 
 
தமிழும் தினத்தந்தியும்
இந்த போட்டிகள் மட்டுமல்லாது, தினத்தந்தி நாளிதழ் மக்களின் தினசரி வாழ்க்கையில் வகிக்கும் முக்கிய பங்கு பற்றி, வாசகர்கள் தங்களது அனுபவங்களை உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் “தமிழும் தினத்தந்தியும்” என்ற தலைப்பிலான சிறப்பு போட்டியும் நடைபெற்றது. இதை ஆர்.ஜே.மணிகண்டன் தொகுத்து வழங்கினார்.
அரங்கத்திற்கு வெளியில் ஸ்னாக்ஸ் தயாரிப்பது ஜூஸ் தயாரிப்பது போன்றவையும் நடந்தது.கலர்ஸ் டி.வி.
இதோடு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் சிவகாமி சீரியல் ராஜாங்கம் , திருமணம் சீரியல் நவீன் அனிதா ஆகியோரும் கலந்துகொண்டு ஆடிபாடி நடித்து பார்வையாளர்களை மகிழ்வித்தனர். நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டிகள் அனைத்திற்கும், ப்ரீத்தி நிறுவனம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. “மாலையில் மெகா பம்பர் பரிசுக்கான போட்டி நடைபெற்றது. அதில் முதல் பரிசான LED டிவி-ஐ p.முத்துலட்சுமி மற்றும் கவுசல்யாவும்,இரண்டாம் பரிசான  வாஷிங்மிஷின்-ஐ m.ஸ்வாதிப்ரியா மற்றும் m.ஜானகியும்,மூன்றாவது பரிசான பிரிட்ஜ்-ஐ n.சீதாலட்சுமி மற்றும் விஜயலட்சுமி ஆகியோரும் பெற்றனர்.

 

இலவச மருத்துவ முகாம்

இந்த பரிசுகள் அனைத்தையும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்களின் மனைவி அத்தியஷா நந்தூரி அவர்கள் வழங்கி சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் ஆட்டோமெட்டிக் செல்ஃபி பூத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டு உடனடியாக பிரிண்ட் செய்தும் வழங்கப்பட்டது.அதோடு ஷீபா மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது. முழுக்க முழுக்க பெண்களுக்கான இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை ஹலோ எப்.எம் விளம்பர பிரிவை சேர்ந்த திருமலையப்பன், மாரிஸ், மஞ்சு ஆகியோர் செய்தனர்.ஒளி ஒலி பணியை பொறியாளர் ஜஸ்டின் மற்றும் மியூசிக் மாஸ்டர் கோமதிநாயகம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

 

 
பெருமை சேர்த்தவர்கள்
மாலையில் திருநெல்வேலியை சேர்ந்த ADC boys நடன குழுவினர் வழங்கிய அருமையான fusion dance-உம் நிகழ்ந்தது. ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாக event மானேஜர் கிருஷ்ணராஜன் அட்மின் முத்துராஜ், பாஸ்கர், அக்கவுண்ட்ஸ் கடவுள், வரவேற்பு அலுவலர் விஜயலட்சுமி, விளம்பர ஒலிபரப்பு பிரிவு ஊழியர் வெண்மதி அலுவலக உதவியாளர் செல்லம் செந்தில், ஓட்டுநர் கருப்பசாமி ஆகிய ஹலோ எப்.எம் ஊழியர்கள் நிலைய மேலாளர் சகாயராஜ் தலைமையில் அயராது உழைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட இந்த அம்மாவும், நானும் பெண்கள் திருவிழாவை அமைதியான முறையில் வெற்றிகரமாக நடத்தி விளம்பரதாரர்கள் மற்றும் பொதுமக்களை நிறைவாக இருக்க செய்தனர்.

கலர்ஸ் தமிழ் வழங்கிய ஹலோ எப்.எம்-இன் "அம்மாவும் நானும்" செலிப்ரேட்ட்-பை ப்ரீத்தி ஷோடியாக் 2.0.இணைந்து வழங்கியவர்கள் உங்கள் சத்யா, பி.எஸ்.என் பொறியியல் கல்லூரி, வி.கே.எஸ்.promoters, வேல் மோட்டார்ஸ். பிரிண்ட் பார்ட்னர் தினத்தந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.