பள்ளிப்பாடங்கள்-பாடல்கள்

பள்ளிப்பாடங்கள்-பாடல்கள்
 

 

பாளையங்கோட்டை தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளியில் 1971ஆம் ஆண்டுமுதல் 1977ஆம் ஆண்டுவரை உயர்நிலைக்கல்வி கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பள்ளியில் பாடங்களை எனக்குக் கற்பித்த எனது மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய அருட்தந்தை சிகாமணி SJ அவர்கள் பாடல்கள் இயற்றுவதிலும், இசையமைப்பதிலும் மிகச்சிறந்து விளங்கினார். பள்ளி மாணவர்களாகிய எங்களுக்கு இசை பற்றிய ஆர்வத்தையும், கவிதை புனையும் திறமையையும் வளர்ப்பதற்கு அடித்தளமாக விளங்கிய அருட்தந்தை சிகாமணி அவர்கள் மிகச்சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல மாணவர்களின் மதிப்புமிக்க தலைவராகவும் விளங்கினார்.

அருட்தந்தை சிகாமணி அவர்கள் 1977ஆம் ஆண்டு இசைத்தட்டு வடிவில், கிறிஸ்தவப் பாடலை இயற்றி இசையமைத்து வெளியிட்டார்கள். பல குரலில் பாடும் திறன்படைத்த பின்னணி பாடகி ஜானகி அவர்களின் குரலில் வெளிவந்த இந்தப்பாடல் நாங்கள் தங்கியிருந்த பள்ளி விடுதியில் அடிக்கடி ஒலித்து எங்களுக்கு அருள் வழங்கும் கீதமாக திகழ்ந்தது. அன்புக்கும், பண்புக்கும் இலக்கணமாய்த் திகழும் அருட்தந்தை சிகாமணி அவர்கள் எனது வளர்ச்சியில் அதிக அக்கரைக்கொண்டவர்கள்.

சமீபத்தில் கூகுளில் உலா வந்தபோது, அந்த அற்புதப்பாடல் எனக்குக் கிடைத்தது. மதங்களைக் கடந்து மனிதர்களை நேசிக்கும் மாண்புமிகு அருட்தந்தையை எந்நாளும் நினைப்பதற்கு இந்தப்பாடல் ஒன்றே போதும்.

 

மிக்க அன்புடன்,
நெல்லை கவிநேசன்

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News