மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நெல்லை கவிநேசன் வழங்கிய பயிற்சி

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 
நெல்லை கவிநேசன் 
வழங்கிய பயிற்சி

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், மேலாண்மைத்துறை (Department of Management Studies) மாணவ - மாணவிகளுக்காக 24.07.2019 அன்று நடைபெற்ற சிறப்புப் பயிற்சியில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவரும், பேராசிரியருமான டாக்டர்.எஸ்.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) கலந்துகொண்டு பயிற்சியளித்தார்.


“உனக்குள்ளே ஒரு தலைவர்”
“Unleash the Leader in You” என்னும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பயிற்சிக்கு பல்கலைக்கழக மேலாண்மைத் துறைத் தலைவரும், பேராசிரியருமான டாக்டர்.N.ராஜலிங்கம் அவர்கள் தலைமைத் தாங்கினார். சிறப்புப் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் விளக்கி தலைமையுரையாற்றினார். 

மேலாண்மைத்துறைப்பேராசிரியரானடாக்டர்.G.மகேஷ்  குத்தாலம் அவர்கள் நெல்லை கவிநேசன் அவர்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். 

பின்னர், பயிற்சியளித்த நெல்லை கவிநேசன் தனது உரையில்... 

“தலைவர் என்பவர் அரசியலில் தலைமை ஏற்பவர் மட்டுமல்ல. சமூகத்தில் சிறந்து விளங்குபவர்கள் மட்டுமல்ல. நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சூழலில் தலைவராக மாறுகின்றோம். அந்த சூழல் எப்போது உருவாகிறது? என்பதை முன்கூட்டியே கணித்துக்கூறுவது சற்று கடினமாகும். இதனால், ஒவ்வொருவரும் தங்களுக்குள் இருக்கும் தலைவரை தட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபடவேண்டும். பல தடைகளாலும், தளைகளாலும் கட்டுப்பட்டு கிடக்கும் மனிதர்கள், அந்தத் தடைகளை இனங்கண்டு நீக்கிவிட்டால் எளிதில் தலைவராகலாம். 

3 பேர் சேர்ந்த குழுவில்கூட ஒரு தலைவர் உருவாகிறார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் தலைமைப்பண்பு தேவையான ஒன்றாக மாறிவிட்டது. 

‘தலைவர்’ என்னும் பெயரில் மட்டுமல்லாமல், பல பெயர்களில் ஒரு தலைவர் அழைக்கப்படுகிறார். சேர்மன், சூப்பர்வைசர், பிசிடென்ட், ஹெட், கவுன்சிலர், மேனேஜர், அசிஸ்டென்ட் மேனேஜர், சீஃப் மினிஸ்டர், பிரைம் மினிஸ்டர், சேர் பேர்சன், மேனேஜிங் டைரக்டர், கேப்டன், சுப்பீரியர், மாஸ்டர், சீஃப் ஆப்பரேட்டிங் ஆபீஸர், சீஃப் எக்ஸியூட்டிவ் ஆபீஸர், பாஸ், அட்மினிஸ்டிரேட்டர், சூப்பிரன்டன்டெண்ட் போன்ற பல பெயர்களும் ஒரு தலைவருக்கான மறுபெயர்கள் என்பதைப் புரிந்துகொண்டால் தலைமைப்பதவியின் முக்கியத்துவம் நமக்கு விளங்கும். 

ஒரு குடும்பத்தை நடத்துவதற்குக்கூட, தலைவருக்கான பண்புகளும், திறமைகளும் மிக முக்கியத் தேவையாக அமைகிறது. குடும்பத் தலைவர் என்ற பொறுப்பை ஏற்பவர்கள் தலைமைப்பண்பு கொண்டவர்களாக திகழாவிட்டால், குடும்பத்தில் குழப்பம்தான் மிஞ்சும். 

எனவே, வாழ்க்கையில் வெற்றி பெறுபவதற்கு ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. ஒரு தலைவர் தகவல்தொடர்பில் (Communication) சிறந்து விளங்க வேண்டும். மற்றவர்களோடு இணைந்து பழகும் தன்மை கொண்டவர்களாக (Human Relation) இருக்க வேண்டும்” - என பல முக்கியத் தகவல்களைக் குறிப்பிட்டு நெல்லை கவிநேசன் பயிற்சியளித்தார். 

பயிற்சியின்போது ‘நேர மேலாண்மை’ (Time Management) பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு அடிப்படையாக அமையும் ‘ஸ்வாட் அனாலிஸிஸ்’ (SWOT Analysis) பற்றிய பயிற்சியும் வழங்கப்பட்டது. தகவல் தொடர்புத்திறனின் (Communication Skills) முக்கியத்துவத்தை விளக்கும் விதத்திலும் பயிற்சி வழங்கப்பட்டது. கவனித்தல் திறன் (Listening Skill) பயிற்சிகளும் மாணவ - மாணவிகள் தலைமைப்பண்பை புரிந்துகொள்ளும் விதத்தில் நடத்தப்பட்டது. 

முடிவில், ‘உடலில் பிரச்சினைகள் இருந்தாலும், மனபலம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்’ என்னும் கருத்தை வலியுறுத்தும் பாடல் காட்சியும் திரையிடப்பட்டது. 







மேலாண்மைத்துறைப் பேராசிரியர்கள் டாக்டர்.E.ராஜா ஜஸ்டஸ்,டாக்டர்.T.ஹெலன், டாக்டர்.K.N.மாரிமுத்து ஆகியோர் மாணவ - மாணவிகளுக்கு வழங்கிய பயிற்சியை கண்டுகளித்தார்கள்.


பயிற்சி சிறப்பாக நடைபெற மேலாண்மைத்துறையின் ஆராய்ச்சி (Ph.D.) மாணவர்கள் திரு.S.T.சுவைதரன் B.E., M.B.A., LLB., மற்றும் திரு.S.ஜெயா டேவிசன் இம்மானுவேல் (M.B.A., M.Phil.,) ஆகியோர் துணைபுரிந்தார்கள்.

நெல்லை கவிநேசன் எழுதி தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்ட "Competitive Examination and Job Opportunities" மற்றும் "சிகரம் தொடும் சிந்தனைகள்" ஆகிய நூல்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலாண்மைத்துறைத் தலைவர் டாக்டர்.திரு.N.ராஜலிங்கம் அவர்களுக்கு நெல்லை கவிநேசன் வழங்கினார்.



1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News