ஆதித்தனார் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

ஆதித்தனார் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை சார்பில், “வேளாண் வணிகத்தின் வாய்ப்புகளும், சவால்களும்” என்ற தலைப்பில் 01.08.2019 அன்று தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. 

தேசிய கருத்தரங்கில் வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.S.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் டாக்டர். D.S.மகேந்திரன் தலைமைத்தாங்கி வாழ்த்துரை வழங்கினார். 

முதல் நிகழ்வின் சிறப்பு விருந்தினரை பேராசிரியர், A.தர்மபெருமாள் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பெங்களூரிலுள்ள இந்திய தோட்டக்கலை இணைப் பேராசிரியர் டாக்டர்.S.ஜான் மனோராஜ் கலந்துகொண்டு “வேளாண் வணிகத்தின் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான வியூகங்கள்” பற்றியும் விளக்கினார். 

இரண்டாம் நிகழ்வின் சிறப்பு விருந்தினரை பேராசிரியர் T.செல்வக்குமார் அறிமுகப்படுத்தினார். இநத நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பேராசிரியரும், ஆராய்ச்சி மையத் தலைவருமான டாக்டர்.C.L.ஜெபமெல்வின் “சிறு வணிக வங்கியின் செயல்பாடுகளும், வேளாண் வணிகத்தின் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். 



தேசிய அளவிலான இந்தக் கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து ஏராளமான பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கருத்தரங்கு அமைப்புச் செயலாளர் பேராசிரியை டாக்டர். A.அந்தோணி சகாய சித்ரா, பேராசிரியர்கள் திரு.A.தர்மபெருமாள், டாக்டர். M.R.கார்த்திகேயன், திரு.T.செல்வக்குமார் மற்றும் நூலக உதவியாளர் திரு.M.முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். 

Post a Comment

புதியது பழையவை

Sports News