மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 27ஆவது பட்டமளிப்பு விழா கடந்த 22.08.2019 அன்று பல்கலைக்கழக சிதம்பரனார் அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.கா.பிச்சுமணி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமைத்தாங்கி 713 பேருக்கு பட்டம் வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் இரண்டு மகிழ்வான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது.


1.1985ஆம் ஆண்டு சென்னை சட்டக்கல்லூரியில் நெல்லை கவிநேசன் பயின்றபோது நெருங்கிய சகோதர நண்பராக பழகிய திரு.தொல்.திருமாளவன் இந்தப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு டாக்டர் பட்டம் பெற்றார். நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரம் வெகுஜன மதமாற்றம் குறித்து “பாதிக்கப்பட்ட நபரின் பார்வை” என்ற தலைப்பில் தொல்.திருமாவளவன் ஆய்வுசெய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். 


2.இந்தப் பட்டமளிப்பு விழாவில் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் வழிகாட்டுதலின்படி -
(1) பேராசிரியர்.என்.செந்தில்குமார், நாகர்கோயில். 
(2) பேராசிரியர்.ஆ.பால் மகேஷ், கடையநல்லூர்
(3) பேராசிரியை ஆர்.பானிலா, சென்னை
(4) பேராசிரியை வி.நளினி, திருச்செந்தூர்
   -நான்கு பேருக்கு "டாக்டர் பட்டம்" வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 

Post a Comment

புதியது பழையவை

Sports News