நெல்லைகவிநேசன் நண்பர் திரு.மு.மகேந்திர பாபு அவர்களுக்கு புதுமை ஆசிரியர் விருது

புதுமை ஆசிரியர் விருது

நெல்லை கவிநேசன் நண்பர்  திரு.மு.மகேந்திர பாபு அவர்களுக்கு புதுமை ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. 

கற்றல் - கற்பித்தலில் யூடியுப் மூலமாக Green Tamil TV (பைந்தமிழ் தொலைக்காட்சி) வழியாக பாடங்களை பெரும்புலவர். திரு.மு.சன்னாசி ஐயா அவர்கள் மூலமாக இனிமையாகவும், எளிமையாகவும் காட்சிப்படுத்தி வழங்கி வருவதற்காக  "புதுமை ஆசிரியர் விருது"  வழங்கப்பட்டது.

"என் கரம் பிடித்தும் ஊக்குவித்த நண்பர்களுக்கும், என் கரம் பிடித்து தொடர்ந்துவரும் அன்பர்களுக்கும் இந்த நேரத்திலே நன்றியைத் தெரிவிக்கின்றேன். எனது இருபதாண்டு கால ஆசிரியப்பணியில்  இதுவரை எனக்கு  வழங்கப்பட்ட பத்துக்கு மேற்பட்ட விருதுகளில் இது மறக்க இயலாத விருது. பதினெட்டாயிரம் சந்தாதாரர்கள், பதினாறு லட்சம் பார்வையாளர்கள், ஐநூற்று எண்பது பதிவேற்றம் என பயணித்துக் கொண்டிருக்கிறது  Green Tamil TV. அனைவருக்கும் நன்றி"-என மகிழ்வோடு நெகிழ்கிறார் மதுரை, இளமனூர், தமிழாசிரியர், நண்பர்  திரு.மு.மகேந்திர பாபு .

Post a Comment

புதியது பழையவை

Sports News