நாகர்கோவில் மேற்படிப்பு வழிகாட்டல் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்

நாகர்கோவில் மேற்படிப்பு வழிகாட்டல் நிகழ்ச்சியில்
நெல்லை கவிநேசன்

நாகர்கோவில் இருளப்பபுரம் சீதாலெட்சுமி திருமண மண்டபத்தில் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் கலந்துகொண்டு வழிகாட்டல் பயிற்சியை நடத்தினார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் துணைப்பொது மேலாளர் திரு.சாம்பசிவம் தலைமைத் தாங்கினார். மீனாட்சி நவீன அரிசி ஆலை உரிமையாளர் திரு.எஸ்.பாரத்சிங் நன்றியுரை வழங்கினார். 

நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள். பயிற்சியில் பங்குபெற்ற மாணவ-மாணவிகளில் சிறந்த கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களுக்கு நெல்லை கவிநேசன் எழுதிய நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது. 

Post a Comment

புதியது பழையவை

Sports News