Ticker

10/recent/ticker-posts

Ad Code

ஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-11

அரசு அலுவலகத்துக்குள் ..நாணா!

சென்ற வாரம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் உரையாற்று முன்  தமிழ் யுனிக்கோடு…(அப்டுடேட் பயன்பாடு  அதன் வீச்சு) பற்றிய அவரது சிறு சந்தேகத்தை மேடைக்கே அழைத்துக் கேட்டறிந்த எளிமை.. பற்றிய எனது வியப்பு அடங்குவதற்குள் அவர்களின் ஜனரஞ்சகமான தொடக்க உரையுடன் மகிழ்வான நிகழ்வு ஆரம்பமானது.


அதற்கு முந்தைய வாரம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் திருமதி. இராஜேசுவரி அவர்களின் முன்னெடுப்பில் நானும்சமீபத்தில் தனது விவசாய செயலிக்கான தமிழக அரசின் கணினித்தமிழ் விருதாளர். திரு. செல்வமுரளி இருவரும் இணைந்து கணினிக்குள்தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்து ஒரு சத்தியப் பிரமாணத்துடன்(!) துவக்கினோம்!


 
கணினிக்குள் தமிழ் தந்த செல்லினம் (நன்றி திரு முத்துநெடுமாறன்) அம்மா மென் தமிழ் –  தமிழ்ச் சொல்லாளர் ( நன்றி முனைவர் தெய்வசுந்தரம் அய்யா )..,மற்றும் (நன்றி திரு. NHM நாகராஜன்)  NHM பயன்பாடு, தமிழ் உள்ளீடு ஒருங்குறி மாற்றி...தமிழில் தேடுதல் பொறி, ஒற்றுப்பிழை, சந்திப்பிழை நீக்கி, மற்றும் கைபேசிகளில் தமிழ், எழுத்துரு உருவாக்கம் என கலந்துகட்டி இரண்டு நாள் பயிலரங்கம் & காட்சியுரையுடன் கவர்மெண்ட் அலுவலர்களின் (!) கலகலப்பும்
காட்டிய ஆர்வமும்..ஆச்சரிய முன்னேற்றம்!
காலத்தை வீணாக்காமல் நேரம் சேமித்து இருக்கைக்கே தேடி வந்த தேநீர் உபசரிப்பு...! அருமை!மறுநாளின் காலை நிகழ்வுக்கு முன்னரே அதிகாலை வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் சிற்ப வேலைப்பாடுகளைக் கண்டதில்   ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை. (சிற்பப் புகைப்படங்களுடன் விரிவான பதிவு விரைவில்!)வேலூர் தொகுதியில் எங்கள் கணினிக் கூட்டணியின் வெற்றிமுதல் நாள் வந்தவர்களின் எண்ணிக்கை மறுநாள் கூடியதில் வெளிப்பட்டது! உடன் கலந்துகொண்டு கலகலப்புடன் உரையாற்றிய பாரதியார் விருது பெற்ற முனைவர் சிவராஜி சார்…தொடர … அடுத்த சில மணித்துளியில் திருவள்ளூர் மாவட்டத்துக்கும் இதே மாதிரியான ஒரு தமிழ்க் கணினிப் பயிலரங்கத்து அழைப்பு வந்ததுதிருவள்ளூர் மாவட்ட   தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி. சந்தானலட்சுமி அவர்களின் அன்பான அழைப்பில்..முன்னெடுப்பில் இந்த ஆட்சி மொழிச் சட்ட வாரம் துவக்கநிகழ்வில்  நானும் நீச்சல்காரன்திரு.ராஜாராமன்  சிறப்பு அழைப்பாளராகவும் பயிற்றுநர்களாவும் முன் ஒத்திகைக்குக்கூட நேரமின்றி மேடையேறினோம்.

02-03-20 நேற்று திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக அரசுப் பணியாளர்களுடன் அரங்கம் நிறைந்து இருந்தது மேலும் மகிழ்வு!
இன்றைய கணிமை உலகில் அரசுப்பணியாளர்களுக்கு தமிழ் உள்ளீடு மற்றும் கையடக்கக் கருவிகளில் தமிழின் வளர்ச்சி அதற்காக பங்களிப்பு செய்தவர்களின் அருட்பணி...முக்கியமாக ஒருங்குறி தமிழ் பயன்படுத்த வேண்டிய காலத்தின்  கட்டாயம் குறித்த மிகத் தெளிவான் பயிலரங்கமாக அமைந்தது மனதிற்கு நிறைவு.


ஆட்சி மொழியும் அரசாணை எழுத்துருவும்! 

இனிவரும் அரசாணைகள் யாவும்மருதம்என்னும் ஒருங்குறியில் தான்   வெளியிடப்பட வேண்டும் என ஒரு  அரசாணை சொல்கிறது.
அந்த மருதம் என்னும் எழுத்துரு நான் எழுதி உருவாக்கியது என்பதில் எனக்குள் ஒருராஜ சுகம்

 இதனை இவன்கண் விடல் என என்னைத் தேடி அழைந்து
இந்த  எழுத்துருவாக்கல் வாய்ப்பை வழங்கிய திரு. உதய சந்திரன் அவர்களுக்கும் உறுதுணையாக வலு சேர்த்த திருமதி தனலெட்சுமி கிரி அவர்களுக்கும், வழுநீக்கி வலுசேர்த்த திரு NHM நாகராஜன் மற்றும் என்னை மேடையேற்றி அழகு பார்க்கும் அரசு விருது பெற்ற
திரு.செல்வமுரளி அவர்களின் பங்களிப்பு மறக்க முடியாதது.

முதலில் வாழ்த்துரை தந்த புலவர். கு சம்பந்தம் .அய்யா அவர்களுக்கும் தமிழுக்கும் எவ்ளோ பந்தம் என்பது அவரது உரையில் தெரிந்தது. பெயருக்கேற்ப ...அம்மா என்ற மூன்றெழுத்தில்
ம்மெல்லினம் அமைந்து பெண்மையையும் 
பத்தாவது  மெய் எழுத்தால் பத்து மாதத்தை குறிப்பதாகவும் கொள்ளலாம் என்ற பொருள் உணர்த்தி..மேலும் அப்பா என்றால் வலிமை.. என்பதில் ப் என்னும் வல்லின விளக்கம்  என்னை ஆட்கொண்டது...உண்மை. மேலும் காலம் கருதி இளைஞர்களுக்கு  வழிவிட்டு ரத்தின சுருக்க உரை கைதட்டல் அள்ளியது இன்னும் கொஞ்சம் அவர் பேசியிருக்கலாம் என்று தோன்றியது.! 

ட்சி மொழி  தமிழ் என்பதில்  தமிழ் உள்ளீடு செய்வதில்
உள்ள நிகழ்கால நெருடல், எளிமை,
speech to text, gboard, google lens, google docs என்ற செயலிகளை இயக்குவது பற்றிய செய்முறை.
மற்றும் தமிழுக்காக...தமிழரால் ( முனைவர் திரு.தெய்வ சுந்தரம் அய்யா அவர்களால் முன்னெடுக்கப்பட்டு உருவான தமிழுக்கான MS word எனச் சொல்லலாம்). உருவாக்கப்பட்டம்மா மென் தமிழ் மென்பொருளை நிறுவுதல் - அதன் எளிய பயன்பாடு, உள்ளீடு, மெய்ப்புத் திருத்தக் கருவிகளை உபயோகித்து பயன்பெறும் முறை என
அரசு ஊழியர்களுக்கு  அள்ளி வீசிய ஆப்ஸ்களின் பயன்பாடுகள்...அனைவரின் முகங்களிலும் ஆனந்தம். அதில் ஒரு அரசு ஊழியர் எங்க  வீட்டுப்பிள்ளைகள் முன் இருப்பது போல ஜாலியா நேரம் போவது தெரியாமல் மாலை 6 மணிக்கு மேலும் அரசு ஊழியர்களை  அமர வைத்துவிட்டீர்கள் என்ற வரிகளில் எங்கள் இருவரின் உழைப்பும் மெய்யாகவே உயிர் பெற்றது போல உணர்ந்தோம்.ஒரே ஊர் பள்ளி,,,,கல்லூரித் தோழமை…..பேட்மிண்டன் டீம் மேட், நட்பு, well wisher திரு. பொன்.சுந்தருடன்….  இரண்டு மூன்று நாட்களாக தெலுங்கானா மாநிலத்து ஸ்ரீசைலம் ( அசர வைத்த சுற்றுச்சுவர் சிற்ப வேலைப்பாடுகள்) அணைக்கட்டு….மற்றும் அச்சம்பேடு ஏரியாக்களில் அசத்தும் அரை கிளாஸ் லெமன் டீ மற்றும் தொடர்ந்து அனத்திய கடும் வெயிலை வேஸ்டாக்காமல் அனுபவித்து  அலசிய களைப்புடன் காலை பத்துமணிக்குச் சென்னை எறங்கினோம்.


அடுத்த இரண்டு மணி நேரத்தில் திருவள்ளூருக்கு அவரது கார் தயார்..
ட்ரைவர் சீட்ல அவரே… 3 மணிக்கு பார்வையாளர்கள் சீட்லயும் அவரே
இந்த நிகழ்வுப் பதிவைச் சிறப்பாக்க கேமராமேனாக மாறி இந்தப் படங்கள் தந்ததும் அவரே! அந்த பொன்.சுந்தர் - நட்பு சுகமானது!
மேலும்
ஒரு மெழுகுதிரி இன்னொரு மெழுகுதிரியை ஒளியேற்ற ஒராயிரமாய் ஒளிபெறும் என்ற லியோ டால்ஸ்டாய் வரிகள் போல  கடைசி மணித்துளி வரைக்கும் வேலூரிலும் திருவள்ளூரிலும் வெளிச்சம் நிறைந்து இருந்த அந்த அரங்கம் நிறைந்த ஆர்வலர்களுடன்!
நட்புடன் தொடர்வோம்!
 கருத்துரையிடுக

0 கருத்துகள்