சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை
- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்
நூலகர் மற்றும் நூலக அறிவியல்
துறைத்தலைவர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம்
திருநெல்வேலி.
அருமையான தமிழ்ச் சொல் ஒன்று இருக்க ஆங்கிலத்தை எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக் கடிப்பார் உண்டோ?
இப்படி உரைநடை நயங்களை இரா.பி.
சேதுப்பிள்ளையின் எழுத்தில் கண்ட மக்களுக்கு புதுமையாக தெரிந்தன.. இனிய உரைச்
செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும்
பாராட்டியுள்ளனர்
அடுக்குத் தொடர், எதுகை, மோனை, இயைபு, முரண் ஆகியவற்றை செய்யுள்களில் மட்டுமே
படித்த மக்கள் அதை உரைநடையிலும் கருத்தாழத்துடன் படித்து பாராட்டினர். சேதுப்பிள்ளையின்
நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று கூறுவார்கள்.
எதுகை,
மோனை, அடுக்குமொழி, இலக்கியத் தொடர் என்பவை செய்யுளுக்கு என்றே
கருதப்பட்ட போது உரைநடையிலும் கொண்டு வந்தவர் இரா.பி.சேதுப்பிள்ளை. அதனாலே சொல்லின்
செல்வர் என்று புகழப்பட்டார். ‘செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை’
என்று சுத்தானந்த பாரதியால் போற்றப்பட்டார்.
அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்த சேதுப்பிள்ளையின்
பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950ம் ஆண்டு 'சொல்லின் செல்வர்' என்னும் விருது வழங்கியது.
தமிழ் அறிஞர், எழுத்தாளர்,
வழக்கறிஞர், மேடைப்பேச்சாளர் என பன்முகம் கொண்ட பாவலர். இவர் தமிழகம்
முழுவதும் வானொலி நிலையங்கள்,
பல்வேறு இலக்கிய அமைப்புகளில் ஆற்றிய இலக்கிய சொற்பொழிவுகளின்
தொகுப்புகளும் பல நூல்களாக வந்தன.
இவரது ‘தமிழின்பம்’ என்ற
நூலுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. மற்றும் அந்த நூல் மலேசியா அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு தமிழ்த்துறை மாணவர்களுக்கு பாட
நூலாக வைத்திருந்தது.
தாமிரபரணி
நதிக் கரை தந்த தமிழறிஞர்களில் இவருடைய பணி குறிப்பிட தக்கது.
திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள இராசவல்லிபுரம் என்கிற கிராமத்தில் வசித்த பிறவிப்பெருமாள் – சொர்ணம் தம்பதியின் பதினோராவது பிள்ளையாகப் 1896 மார்ச் 2ந்தேதி பிறந்தார்.
இலக்கிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் சேதுப்பிள்ளையின் தமிழுக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி. சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று அழைத்துப் பாராட்டினார். மேலும் உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார்.
இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச்
சென்னைப் பல்கலைக் கழகம் 'முனைவர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கால்
நூற்றாண்டு காலம் பணியாற்றியதைப் பாராட்டி "வெள்ளிவிழா" எடுத்து , "இலக்கியப் பேரறிஞர்" என்ற பட்டத்தையும் அளித்து சிறப்பித்தது.
14 கட்டுரை
நூல்கள், 3 வாழ்க்கை
வரலாற்று நூல்கள் என 20-க்கும்
மேற்பட்ட உரைநடை நூல்களை எழுதியுள்ளார். 4
நூல்களை பதிப்பித்தார்.
சென்னைப்
பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. தமிழ் விருந்து, தமிழர்
வீரம், ஆற்றங்கரையினிலே
உள்ளிட்ட இவரது பல படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இலக்கியப் பேரறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை 65 வயதில்
(1961) மறைந்தார்.
நெல்லை மண்ணுக்கு பெருமை சேர்த்த அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
--------------------------------------------
கருத்துரையிடுக