சுப்ரமணிய பாரதியார்--ஆவணப்படம்
சுப்ரமணிய பாரதியார்
-ஆவணப்படம்-
பாரதி எவ்வாறு கவிஞனாகவும், தேச பக்தனாகவும், ஆன்மீகவாதியாகவும் இருந்தாரென்பதைச் சித்தரிக்கும் டாக்குமெண்டரி. புனைகதைகளைத் தவிர்த்து, ஆவணத்துணையோடு எடுக்கப்பட்டது. காசி, சென்னை, புதுவை, மதுரை, எட்டயபுரம், கடையம், திருநெல்வேலி என பாரதி வாழ்ந்த நகரங்கள், தங்கியிருந்த இல்லங்கள் படமாகியுள்ளன. அவர் காலத்து மனிதர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அவருடன் பழகிய இரு முதியவர்களின் பேட்டிகள் பாரதியைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன.
எழுத்து: இந்திரா பார்த்தசாரதி
காமிரா: பி.எஸ். தரன்
இசை: எல். வைத்தியநாதன்
படத்தொகுப்பு: கௌதம்
தயாரிப்பு: ந.முருகானந்தம்
இயக்கம்: அம்ஷன் குமார்
முதல் வெளியீடு: 1999 (ஜெயகாந்தன் சிறப்புரை)
கருத்துரையிடுக