இந்து நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா

 சௌநா அறக்கட்டளை  (SOWNA TRUST) சார்பில் 

செட்டிகுளம் 

இந்து நடுநிலைப்பள்ளியில்

 முப்பெரும் விழா.



திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, செட்டிகுளத்தில் 1937ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு நிதி உதவி பெறும் பள்ளி ,இந்து நடுநிலைப்பள்ளி ஆகும்.

பள்ளியின் அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்தி வருகிறார், பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு .பெரிய நயினார் அவர்கள். 

பள்ளியில் செயலாளர் நல்லாசிரியர் திரு. P. காண்டீபன் அவர்கள் .தலைமை ஆசிரியை திருமதி .லதா மங்கேஷ்.

 பள்ளியில் அனைத்து அரசு விழாக்கள் மற்றும் இலக்கிய மன்ற விழா ஆண்டு விழா, விளையாட்டு விழா ஆகியன மிகச்சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

 மேலும், ஒவ்வொரு ஆண்டும் SOWNA அறக்கட்டளை சார்பில்," திறன் வளர்க்கும் போட்டிகள் " நடத்தப்படுகிறது.

 போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.

  மேலும், இந்து நடுநிலைப்பள்ளி மற்றும் SOWNA அறக்கட்டளையும் இணைந்து 50 வயதுக்கு மேற்பட்ட கண் பார்வை குறைபாடு உள்ள முதியவர்களுக்கு திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் கண் அறுவை சிகிச்சை இலவசமாக நடைபெற உதவிகள் வழங்கப்படுகிறது.



  பள்ளியில் ஒவ்வொரு நாளும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில், மாணவர்களின் மேடை பயத்தை போக்குவதற்காக  திருக்குறள் விளக்கம், பொது அறிவு வினா-விடை, பழமொழி விளக்கம் ,மூலிகை மருத்துவம், மாவட்ட ஆட்சியாளர் அறிவுரை செய்திகள், பிறந்தநாள் வாழ்த்து ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் விளக்கம் தருவார்கள். இவை தவிர , அரசு சார்பாக நடத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் மாணவர்கள் சிறப்பாக கலந்து கொண்டு பரிசு பெறும் வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

   ஒவ்வொரு ஆண்டும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா மூலம் நடத்தப்படும் பண்பாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் பல பரிசுகளை மாணவர்கள் பெறுவதற்கு இப்பள்ளி வழிவகை செய்கிறது.

    மேலும் ,ஆண்டுதோறும் கல்வி சுற்றுலா மற்றும் களப்பயணம் கூட்டிச்சென்று வரலாற்று சிறப்புமிக்க பல இடங்களை கண்டு களிக்கவும் இந்த பள்ளியில் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

     மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் தவிர பல அரிய தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் "ஸ்மார்ட் கிளாஸ் "(SMART CLASS) வசதி செய்யப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

      அரசு நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்து அதில் வெற்றி பெறவும் உதவியாக இந்த பள்ளி அமைந்துள்ளது.

       குறிப்பாக ,மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய திறனாய்வு தேர்வில் மாணவர்களை வெற்றி பெறச்செய்து மாதம்தோறும் 1000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 12,000 ரூபாய் பெரும் வகையில் சிறப்பு பயிற்சிகள் இந்த பள்ளியில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வெற்றி பெற்ற மாணவர்கள் நான்கு வருடங்களுக்கு மொத்தம் 48,000  ரூபாய் பெறும் அற்புத வாய்ப்பை இந்த பள்ளி வழங்குகிறது. இலவச ஆட்டோ வசதி இங்கு உண்டு.

         பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த பள்ளி மேலும் சிறப்புகள் பெற இனிய வாழ்த்துக்கள்.


                                        

                                        ----------------------------------------------------


Post a Comment

புதியது பழையவை

Sports News