வெற்றி படிக்கட்டுகள்.


நெல்லை கவிநேசன் 
 வழங்கிய 
வெற்றி படிக்கட்டுகள். (07.12.2025)

(பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி).
 
காயல்பட்டினம்-ஆறுமுகநேரி மேல்நிலைப் பள்ளியில்.....


    காயல்பட்டினம் -ஆறுமுகநேரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக "வெற்றிப் படிக்கட்டுகள் "என்னும் சிறப்பு கல்வி ஆலோசனை கருத்தரங்கு நடைபெற்றது.

    இந்தக் கருத்தரங்கில், சிறப்பு பயிற்சியாளராக எழுத்தாளரும், பேராசிரியருமான டாக்டர் .எஸ். நாராயண ராஜன் (நெல்லை கவிநேசன்) கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.
 
 

 
    இந்தக் கருத்தரங்கில் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள். 

    கருத்தரங்கில் தொடக்க விழா 7 12 2025 காலை 9:30 மணிக்கு பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது. 
 
 
 
 

இந்த விழாவிற்கு காயல்பட்டினம் ஆறுமுகநேரி கல்விச் சங்கத்தின் தலைவர் திரு.ஹாஜி .எஸ் எம் .அப்துல் காதர் தலைமை வகித்தார்
 
 
 
 கல்விச் சங்கத்தின் பொருளாளர் திரு வி .கே .எம். பாஸ்கர் மற்றும் பள்ளியின் துணைத்தலைவர் திரு . பி. கணேசன் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தார்கள்.

    கல்விச்சங்க நிர்வாக குழு உறுப்பினர் திரு ஜி ராமசாமி கல்விச்சங்க நிர்வாக குழு உறுப்பினர் லேண்ட்மார்க் ஹாஜி அபுல் ஹாசன் மற்றும்
நிர்வாக குழு உறுப்பினர் திரு. இரா. அமிர்தராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

பள்ளி தலைமையாசிரியர் திரு . எஸ். கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். காலை முதல் மாலை வரை இந்த கருத்தரங்கு நடைபெற்றது.
 
 
 
 

 வெற்றி படிக்கட்டுகள் என்னும்கருத்தரங்கில், அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?, குறிக்கோளை நிர்ணயித்தல், மேற்படிப்புக்கான ஆலோசனைகள், வெற்றிக்கு உதவும் குடும்ப சூழ்நிலைகள், நேர மேலாண்மை ,பட்டப்படிப்புகள் பலவிதம் ,மேற்படிப்புகளை தேர்ந்தெடுப்பது எப்படி? ,அரசு பணி பெறுவது எப்படி கலெக்டர் ஆவது எப்படி?- போன்ற பல்வேறு விளக்கங்களை பேராசிரியரும் எழுத்தாளருமான டாக்டர் எஸ் நாராயண ராஜன் என்ற நெல்லை கவிநேசன் வழங்கினார்.
 
 
 
    கருத்தரங்கில் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விளக்கங்கள் வழங்கப்பட்டது. சிறந்த பதில் வழங்கியவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டன. 
 
 
 
 
 
 
 
    சின்னஞ்சிறு பயிற்சிகள், குறும்படங்கள், கேள்விகள் பதில்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோரின் கருத்துரைகள்- என பல்வேறு விதங்களில் காலை முதல் மாலை வரை பயிற்சிகள் வழங்கப்பட்டன. 
 
 
 

    பயிற்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பில் ஃபைல் , குறிப்பேடு, பேனா, மதிய உணவு, ஆகியவை வழங்கப்பட்டன. 
 
 
 
 

    நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க பொறுப்பாளர்களான சென்னை
போலீஸ் அதிகாரி ADSP திரு. ஜான் கென்னடி மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி திரு.K.S. முருகேசன் திரு. பெர்டிநால்ட் கோமஸ் கோமான் திரு. பத்மநாபன்ஆகியோர் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
 
 
 
 

    நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரி திரு .முருகேசன் பயிற்சியாளர் நெல்லை கவிநேசனுக்கு பொன்னாடை அணிவித்து அணிவித்து கௌரவித்தார்.
 
 
 

    நிகழ்ச்சியின் முடிவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு .எஸ். கண்ணன்  நன்றி கூறினார்.
 


    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திரு. கணேசன் மற்றும் ஆசிரியர் திரு அரிச்சந்திரன் தலைமை ஆசிரியர் திரு கண்ணன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.


                                                      ----------------------------------------------
 
 
 






 



 
 
 
 
 
 








                                                                 --------------------------------------


Post a Comment

புதியது பழையவை