போட்டித் தேர்வுக்கான பொதுக்கட்டுரைகள்


புத்தகத்தைப்பற்றி…

போட்டிகளே தனித்துவத்தை உருவாக்குகிறது. போட்டிகள் இல்லாத உலகத்தில் வெறுமையாய், தன்னந்தனியாய் நின்று தவித்து, பலியாடுகளைப்போல் பரிதாபமாய் கிடக்கிறது தனித்துவம். உண்மையில், நம் ஆளுமையும், ஆழ்ந்த திறமையையும், அடிக்கோடிட்டு காட்டி தூண்டுகோலாய் அமைவது போட்டிகள்தான்.

“போட்டித் தேர்வுகளுக்கான பொதுக் கட்டுரைகள்” என்னும் இந்நூலின் ஆசிரியர் இனிய நண்பர் நெல்லை கவிநேசன் அவர்கள். தன் மாணவப் பருவம்தொட்டே எழுதத்தொடங்கி கவிஞர், எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், பேராசிரியர். மாணவர் மற்றும் இளைஞர் சமுதாயத்தின் உணர்வுகளையும், தேவைகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து அறிந்து, தொடர்ந்து தன் எழுத்துக்களால் உற்சாகமூட்டுபவர்.

போட்டித்தேர்வு எழுதும் ஒவ்வொருவதும் வாசிக்க வேண்டிய, படித்துப் பயன்பெற வேண்டிய, பாதுகாக்க வேண்டிய சிறந்த புத்தகமாக இந்நூல் விளங்குகிறது. இளைய தலைமுறை போட்டித்தேர்வுகளில் வெல்ல இதுபோன்ற பல்வேறு வழிகாட்டி நூல்களையும் சமூக நூல்களையும் நண்பர் நெல்லை கவிநேசன் அவர்கள் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

(நூல் வாழ்த்துரையில் வித்தக கவிஞர் பா.விஜய்)

விலை: ரூபாய்.90/-


Post a Comment

புதியது பழையவை

Sports News