அந்தமான் பயண அனுபவங்கள்



புத்தகத்தைப்பற்றி… 

அந்தமானைப் பற்றிய முழுமையான தகவல்களை ஓர் ஆய்வாளரின் கூர்மையான பார்வையுடனும், ஒரு சுற்றுலாப் பயணியின் இனிய கண்ணோட்டத்துடனும், தான் பெற்ற இன்பம் பிறரும் பெற்றிட வேண்டும் என்ற சமுதாய நோக்குடனும், ஆர்வத்துடனும் திரட்டி, எளிமையாகவும், சுவையுடன் படிப்போர் உள்ளத்தில் வாழ்வில் ஒரு முறையாவது அந்தமான சென்றுவர வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் இந்நூலை பேராசிரியர் நெல்லை கவிநேசன் ஓர் இலக்கிய விருந்தாகப் படைத்துள்ளார்.

அந்தமான் தீவைப்பற்றியும், தீவின் பல்வேறு அமைப்புகளைப் பற்றியும் வரலாற்றுப் பின்னணியுடன் சுருங்கக்கூறி விளங்க வைக்கும் எழுத்தாற்றல் நூலுக்கு தனிச்சிறப்பு கூட்டுகின்றது.

தன்னை அன்போடும், பண்போடும் வரவேற்றும், விருந்தோம்பி வழிகாட்டியாக செயல்பட்ட சான்றோர்களை நட்பு உள்ளத்துடனும், நன்றியுடனும் எண்ணிப் பார்த்து மகிழ்ந்திடும் தன்மையும், பாங்கும், எவரையும் நூலை திரும்ப ஒருமுறை படிக்கத்தூண்டும். இந்திய விடுதலைப்போரில் ஈடுபட்டவர்கள், கொடுமைப்படுத்தப்பட்ட சிறையையும், அத்தியாகிகள் எவ்வாறு இன்றும் நினைவுகூறப்பட்டு போற்றப்படுகிறார்கள் என்பதை பெருமையுடனும், எழுச்சியுடனும், உணர்வுப்பூர்வமாக எண்ணிப்பார்க்கும் பகுதிகள் நெஞ்சை நெகிழச் செய்வன.

பழங்குடியினர் வாழ்க்கை முறைகள் பற்றியும், அவர்களை நாகரீக நீரோடையில் சேர்க்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள்பற்றியும், அந்தமானில் வெளியாகும் பத்திரிக்கைகள், வழிபாட்டு தலங்கள், கோயில்கள் பற்றிய செய்திகளும் களிப்பூட்டுவன. இந்நூலின் சிறப்பு அம்சமாக அதன் இறுதிப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள், தங்கும் இடங்கள் பற்றிய தகவல்கள் விளங்குகின்றன.
   
பயணத்தை மேற்கொள்வோர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளும் விளக்கமாக கூறப்பட்டுள்ளதால், முன்கூட்டியே பயணத் திட்டமிடலுக்கு இது உதவியாக அமையும். பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொள்பவர்கள் எவ்வாறு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தநூல் திகழ்கிறது. 


விலை: ருபாய்.30/-



Post a Comment

புதியது பழையவை

Sports News