சட்டம் சந்தித்த பெண்கள்




புத்தகத்தைப்பற்றி...

பிரபல வழக்கறிஞர்களை நேரில் சந்தித்து, சிறுகதை அமைப்பில் உண்மைச் சம்பவங்களை கட்டுரைக் கதைகள் அடங்கிய நூலாக “சட்டம் சந்தித்த பெண்கள்” என்னும் இந்நூலை உருவாக்கியுள்ளார் நெல்லை கவிநேசன்.

நெல்லை கவிநேசன் அவர்கள் சென்னை, சட்டக்கல்லூரி மாணவராக இருந்தபோது வழக்கறிஞர்களை சந்தித்து, வழக்குகள் சம்பந்தப்பட்ட தகவல்களைப் பெற்று, அதன் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரைக் கதைகளின் தொகுப்பாக இந்நூல் திகழ்கிறது.

தலையணை மந்திரம், மனைவி நீயா? நானா?, அவளா செய்தாள், ஒரு கனி இரண்டு கிளிகள், காதலுக்கு 144, புது ருசி, கணவன்-களிமண் காதலன்-கருப்புக்கட்டி, முக்கோணல், அனுபவிக்கத் தெரியாதவன், பெண்ணுக்கு நீதி எங்கே, உடல் பொருள் இன்பம், குட்டி புட்டி, ஒரு காதலன் ஒரு கணவன், வேலியும் பயிரை மேயும், உன்னை நான் சந்தித்தேன் - போன்ற படிக்கத்தூண்டும் தலைப்புகளைக்கொண்ட தொகுப்பாக இந்நூல் திகழ்கிறது.

இந்தநூலை ஆய்வுசெய்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பில். பட்டம் பெற்றவர் பேராசிரியர் ஏ.பெரிய நாயகம் ஜெயராஜ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


விலை: ருபாய். 30/-


Post a Comment

புதியது பழையவை

Sports News