மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு கருத்தரங்கில் நெல்லை கவிநேசன்

மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு கருத்தரங்கில் நெல்லை கவிநேசன்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் Centre for Teacher Resource and Academic Support இணைந்து 20.08.2019 அன்று மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு கருத்தரங்கை நடத்தியது. இந்த கருத்தரங்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின்  Pandit Madan Mohan Malaviya National Mission on Teachers and Teaching என்னும் புராஜக்ட் ஆதரவோடு நடத்தப்பட்டது. 

இந்தக் கருத்தரங்கின் தொடக்கவிழா மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர்.K.பிச்சுமணி தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கின் அமைப்புச் செயலாளரான பேராசிரியர்.S.லெனின் வரவேற்புரை நிகழ்த்தினார். கருத்தரங்கின் முக்கியத்துவத்தைப் பற்றிய விளக்கங்களை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர்.B.வில்லியம் தர்மராஜா விளக்கினார். பல்கலைக்கழக கலைப்பிரிவுகளின் டீன் பேராசிரியர் டாக்டர்.R.மருதகுட்டி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர்.N.ராஜலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “Opportunities in the Field of Science and Engineering" என்ற தலைப்பில் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் டாக்டர்.K.கோகுலகிருஷ்ணன் உரையாற்றினார். 

தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி பேராசிரியை டாக்டர்.A.கரோலின் ஜெபசெல்வி “Opportunities in the Field of Medical Science" என்ற தலைப்பில் விளக்கவுரை வழங்கினார். 

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.S.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் “What Next After Plus Two?" என்ற தலைப்பில் உரையாற்றி விளக்கம் அளித்தார். 


விழாவுக்கான ஆலோசனைகளை வழங்கிய பல்கலைக்கழக கல்வித்துறை பேராசிரியரும், இளைஞர் நலத்துறை இயக்குநரும், இளையோர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அதிகாரியுமான பேராசிரியர்.டாக்டர்.A.வெளியப்பன் நன்றியுரை வழங்கினார்.

3 கருத்துகள்

  1. Thank you very much for your kindness and blessings sir.
    With regards
    Nellaikavinesan

    பதிலளிநீக்கு
  2. Good initiative. The topics discussed in this program was very useful. Particular field people gave a clear explanation about opportunities in their field like science and engineering and medicine. The teachers who attended this program should pass on all the information to the higher secondary students in their school.If you need any information about Tirunelveli you can check in Tirunelveli today website https://www.tirunelveli.today/

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News