அறிவியல் கண்காட்சி ஆர்வத்தோடு மாணவ-மாணவிகள்

அறிவியல் கண்காட்சி ஆர்வத்தோடு மாணவ-மாணவிகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர மதிப்பீட்டு குழு சார்பில், “மாசு கட்டுப்பாடு” என்ற தலைப்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி 30.08.2019 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர்.து.சி.மகேந்திரன் தலைமைத் தாங்கினார். உள்தர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு.பாலு வரவேற்றுப் பேசினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் திரு.சுவாமிதாஸ் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் வாழ்த்திப் பேசினார். இக்கண்காட்சியில் 18 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 30க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.

பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர் மாசுபடுதலை தடுக்கும் முறைகள், சூரிய ஒளிமூலம் மின் உற்பத்தி செய்யும் முறைகள் போன்றவைகள்பற்றி இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றை பல்வேறு பள்ளிகளிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். சிறந்த அறிவியல் படைப்புகளை உருவாக்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இக்கண்காட்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் டாக்டர்.அபுல்கலாம் ஆசாத், டாக்டர்.ஜெசிந்த் மிஸ்பா, டாக்டர்.பாகீரதி மற்றும் பேராசிரியை ஸ்ரீதேவி, செண்பகா தேவி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.  


Post a Comment

புதியது பழையவை

Sports News