எண்ணமும் எழுத்தும் - ஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-4

எண்ணமும் எழுத்தும் 
ஓவிய வல்லுநர் நாணா 
எழுதும் தொடர்-4

'ஒன்ற டன்' ஒயிட்ல  'சூர்யா பல்ப் வெளிச்சம்! 

இந்தியா டுடே.வார இதழ்….தமிழ் தெலுங்கு மலையாளம்..!



பத்திரிகை அலுவலகம் என்றாலே எப்போதும் பரபரப்பு.. அதுவும் வாராவாரம் வியாழக்கிழமை… வெளியூர் வாரச் சந்தையில் கடைபரப்பிய யாவாரம் மாதிரி… 

தமிழ் வார இதழில் கவர் ஸ்டோரி கருணாநிதி - ஜெயலலிதா…பஞ்சாயத்துன்ன்னா….

பக்கத்து டேபிளில்..கேரள..உம்ம்ஞ்சாண்டி ..பினராயி…..மேட்டர மலையாளத்துல பரஞ்ஞ்சூ! 

இக்கட… நாயுடு வெர்சஸ்  ஒய் யெஸ் ஆர் ரெட்டி காரு கவர் டிசைன் டெல்லிக்குப் பம்பிச்சு… என ஷ்ஷ்ஷ்ஷப்பா ...தலைவலிக்கு மிக அருகில்!

தமிழ் தெலுங்கு மலையாளம் என இந்தியா டுடே 3 மொழிகளும் அச்சுக்கு செல்லும் வார நாளில் சென்ட்ரல் ஸ்டேஷன் மாதிரி….கெடக்கும்! 

மூன்று மொழிகளின் வடிவமைப்புப் பொறுப்பு…

விரல்களின் ஐந்து மொழிகளிலும் வலி எடுக்கும்! ப்ளஸ்… 

விழிகளும் சேர்ந்து வியாழக்கிழமை வேலைப்பளுவில் திணரும்!

இதற்கிடையில் ஒரு ப்ளாஷ் நியூஸ்!

(நானும் மற்றவர்கள் போல அதை அந்த நாளின் ஒரு சாதாரண நிகழவாகக் கருதி கடந்துசென்றிருக்க விரும்பி இருந்தால்…அடுத்து வரும் சுமார் 30 வரிகளை எழுத நேர்ந்திருக்காது!)

நடிகர் சூர்யா - இந்தியா டுடே சிறப்பிதழ் வெளிவந்த சமயம்!.. (மார்ச் 2014 ஒரு வியாழக்கிழமை)


அவர் அந்த இதழ் பார்த்துவிட்டு அப்போதே கடிதமும் ..மலர்க்கொத்தும்கொடுத்தனுப்பியதோடு நிறுத்திகொள்ளாமல்...அந்த மலர் தயாரிப்புக் குழுவைச் சந்தித்துக் கைகுலுக்க திடீர் முடிவெடுத்து... மறுநாள் மும்பைக்கு விமான நிலையம் செல்லும் இடைவெளியில் இந்தியா டுடே அலுவலகத்துக்கு நடிகர் சூர்யா நேரில் வருவதாக கசிந்தது செய்தி! 



நடிகர் சூர்யாவுக்கு புகழ் சேர்த்த ’கோடீஸ்வரன்’ டிவி நிகழ்ச்சிக்குப் பின்னால் உழைத்தவர்களை சின்னத்திரையில் முன்னால்  தெரியவைத்து நட்பு பாராட்டிய சூர்யாவின் ஒரு உற்சாக 'எபிசோட்' நிகழ்ச்சி நினைவில் வந்து போனது.

மேற்சொன்ன வலிமிகுந்த ஒரு வியாழக்கிழமையில் சூர்யா வந்து நின்றால்…! பின்னணியில் அடுத்தடுத்து தொடரும்  எடிட்டோரியல் மீட் போர்டுல உள்ள கிறுக்கல்களை மறைக்க அதிரடியாய் இந்தியா டுடே - சூர்யா சிறப்பிதழின் அட்டையை மையமாக வைத்து ஒரு இன்ஸ்டண்ட் பேக் டிராப்…டிசைன் ரெடி செய்தேன்… 



பென் ட்ரைவுடன் சென்னையின் எல்லிஸ் ரோடு சந்துகளில் புகுந்து போயி… டிஜிட்டல் பேனர் ப்ரின்ண்ட்டாகி வெளிவந்து விழுந்தபோது இரவு 12 மணி !


காலையில் கூகிளாண்டவர் சன்னிதியில் (பூ போட்டதில் கிடைத்த 10 - 15 சூர்யாவில் சுளுவாக வரையத் தோதான ஒரு இமேஜ் செலக்க்டெட்!)  சூர்யாவை பென்சிலில் ஒரு அவசர்ர்ர.. சர சர…  கிறுக்கலை முடித்து எடுத்துக்கொண்டேன்!



சென்னை அண்ணாசாலை….…அதுவும் சொன்ன நேரத்தில் இந்தியா டுடே பத்திரிகை அலுவலகத்துக்குள் ஒரு 'ஒன்ற டன்' ஒயிட்டுல  'சூர்யா’ பல்ப் வெளிச்சம் உள்ளே புகுந்த அவரை ஈர்த்து நிப்பாட்டியது.....வாயிலில் செய்து வைத்த பிளெக்ஸ் டிசைன்.. 


(நேத்துதானப்பா வர்றோம்னு சொன்னோம் – அதுக்குள்ளயும் ப்ளக்ஸ் போர்டு சுப்பிரமணியபுரம் போல..!)  

அது இவர் வேலைதான் எனக் கையைக் காட்ட.. எனது மெனக்கடல் அவரை சந்தோஷப்படுத்தியதை அவரது கைகுலுக்கலில் உணர முடிந்தது… (என் பாதிக் களைப்பு நீங்கியதும்  உண்மையே!)

பொறுப்பாசிரியர்…முதன்மைச் செய்தியாளர்கள்,புகைப்பட நிபுணர்கள்… ப்ரூஃப் ரீடர்கள்…கார்ட்டூனிஸ்ட்….

வடிவமைப்பு ஓவியர்கள், சிஸ்டம் எஞ்சினியர்ஸ்.. விளம்பரம் - சர்க்குலேஷன் பிரிவு மக்கள் தாண்டி…

கடைநிலை ஊழியர்கள் வரை நலம் விசாரித்து நேரம் ஒதுக்கியதில் நடிகர் சூர்யாவின் எளிமை எல்லோரையும் கவர்ந்துவிட்டது என்பது அடுத்து ஒரு வாரம் அந்த ’அகரம்’ தந்த நாயகனின் அலைத்தடத்தின் தாக்கம் எல்லோர் முகங்களிலும் தெரிஞ்சது!


அவரது அப்பா நடிகர் சிவகுமார் மிகப் பெரிய ஆர்டிஸ்ட்! 

1988 ல்..ஜெயிலில் கேட்ட உண்மைக்கதைகள் –திரு. கல்யாண்குமார் எழுதி…

திரு. ராசி அழகப்பன் பேஜஸ் பதிப்பகம் வெளியீட்டு விழா மேடையில் (என் முதல் அட்டைப்படம்) வரைந்த  என்னையும் அழைத்து மேடையில் அமரச் செய்த நிகழ்வைப் பற்றிச் சொல்ல.. 

…சூர்யா கண்களில் நேசம்!  இதழை வடிவமைத்த சக ஆர்டிஸ்ட் சசி குமார் (லயோலா …விஷுவல் கம்யூனிக்கேஷன்… க்ளாஸ்மேட்...கே.வி ஆனந்த்) ...அயன் பட அனுபவங்களைப் பகிர்ந்தபோது கிடைத்த இடைவெளியில் …

அவரை சர…சர.. அவசரமா வரைந்த அந்த ஓவியத்தை அவரிடம் நீட்டினேன் .... .


ஒரு கணம் உற்றுப் பார்த்துவிட்டு ...' நாணா…சார்….நீங்க வரைஞ்ச டிராயிங் நான் இப்போது என்ன கெட்டப்பில் இருக்கிறனோ  அப்படியே கண்ணாடியில் பார்ப்பது போல இருக்கு!’ என்ற சொன்னது கொஞ்ஞ்ஞ்சம் ஓவர்தான்! 


(எல்லாப் புகழும் கூகிள்ளுக்கே)....ஓவியத்தில் அன்புக்கு நன்றி என்று தமிழில் எழுதிய போது ...




ஒரு தலைசிறந்த  ஓவியரின் மகனை வரைந்த… இராங்கியம் கிராமத்து ஓவிய ஆசிரியரின் மகனின் களைப்பெல்லாம் காணமல் போயி …’சிங்கம்’ படத்துல கிராபிக்ஸ்ல  மூளைக்கு அருகே நாலாவது சிங்கம் வந்து போனது மாதிரி ஒரு உற்சாக ஃபீலிங்க் வந்ததுன்னு சொன்ன ....நீங்க நம்பியே ஆகணும்னு அவசியமில்லை!

-மீண்டும் தொடர்வேன்.

4 கருத்துகள்

  1. விறு விறுப்பே உனது இன்னொரு பெயர் நாணாவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கூரிய அவதானிப்பு...மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது!நன்று...நன்றி!

      நீக்கு
  2. ஏண்டா லேட்டுண்ணு கேக்கப்படாது...ஒரு ஓவியனின் ஒரு வரைகலை நிபுணனின், ஒரு ரசிகனின் அதுக்கப்புறம் ஒரு கைதேர்ந்த எழுத்தாளனுக்கே உரித்தான சுஜாதாத்தன துள்ளல் நடை எழுத்துக்களைக் கூட்டி படித்து நீ சொல்லுவதுபோல் கற்பனை செய்து படிக்க இவ்வளவு நாளாச்சு படித்து முடிக்க....படித்ததில் நானே நேரில் கேட்டு பார்த்து ரசித்தது போன்ற உணர்வு... பின்னிட்ட போடான்னு உரிமையோடு சொல்லிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருப்பா ந்நீயி!?...இப்ப்டி என்னைய ஸ்கேன் பண்ணி ரிப்போர்ட் அடிக்குற! நல்லா இரு,..நல்லா இரு.!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News