இலவச வாலிபால் பயிற்சி முகாம்
தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் (அம்பை) காவல் உட்கோட்டத்தில், ‘லவ்லி ப்ரண்ட்ஸ்’ அறக்கட்டளை மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இணைந்து மாணவர்களுக்கான ஒரு மாத கால இலவச வாலிபால் பயிற்சி முகாமை இன்று தொடங்கி வைத்துள்ளனர்.
இந்த முகாமை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பிரசண்ண குமார்., IPS அவர்களின் வழிகாட்டுதல்படி அம்பை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) திரு. கணேஷ் குமார் அவர்கள் தொடங்கி வைத்தார். விழாவில் அறக்கட்டளை நிறுவனர் திரு. ஜெகதீசன், செயலாளர் திரு. கோபாலகிருஷ்ணன் மற்றும் பொருளாளர் திரு. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சார்பு ஆய்வாளர்கள் திரு. திருமலை குமார் மற்றும் திருமதி. உதயலட்சுமி, அம்பாசமுத்திரம் பாய்ஸ் கிளப் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மே 1 முதல் மே 31 வரை தினசரி காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாமில், அம்பை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 21 மாணவிகள் மற்றும் 77 மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
மாணவர்களுக்கு கிங் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு. வெங்கடேசன், VN பிரண்ட்ஸ் கிளப் கோச் திரு. தினேஷ் சாமுவேல், கேம்பிரிட்ஜ் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு. மகேஷ் மற்றும் மாதா யூத் கிளப் கோச் திரு. ஜெய் ராஜா ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.
முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக விளையாட்டு உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஆரோக்கியமான சிற்றுண்டி வழங்கப்படுவதுடன், வாரம் ஒருமுறை “தன்னம்பிக்கையே தனது வெற்றி” என்ற தலைப்பில் சிறப்பு கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.
முகாம் நிறைவில் மாணவர்களுக்கு வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளதுடன், பயிற்சியில் முழுமையாக கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் டி-ஷர்ட்களும் வழங்கப்பட உள்ளது.
முகாம் நிறைவுவிழாவில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்ற உள்ளார். இளைஞர்களை நல்லிணக்கமும் ஒழுக்கமும் கொண்ட சமூக உறுப்பினர்களாக உருவாக்கும் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டு அதிகரித்து வருகிறது.
-----------------------------------
கருத்துரையிடுக