TNPSC போட்டித்தேர்வுகளில் வெற்றி உறுதி



புத்தகத்தைப்பற்றி…

வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு இன்றைய இளைஞர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை சந்திக்க வேண்டியநிலை உருவாகி உள்ளது. முன்பெல்லாம் ஏதேனும் ஒரு படிப்பை முடித்தவர்களுக்கு அரசு வேலையும், தனியார் வேலையும் மிக அதிகளவு வழங்கப்பட்டன. ஆனால், இப்போது பட்டமேற்படிப்பு மற்றும் தொழில்கல்வி முடித்தவர்களுக்கும் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி அந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.

இதனால் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் மாணவ - மாணவிகள் மற்றும் பட்டதாரிகள் இளம் வயதுமுதல் போட்டித் தேர்வுகளில் அதிகமாக இடம்பெறும் பொது அறிவு, பொதுத்தமிழ் சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்வது சிறந்ததாகும். மேலும் போட்டித் தேர்வுகளை சந்திக்க உதவும் பொதுஅறிவை வளர்க்கும் நூல்களையும் தொடர்ந்து படிப்பது நல்லது.

வேலை வழங்கும் போட்டித் தேர்வுகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முக்கியத் தேர்வுகள், போட்டித்தேர்வுக்கு தயார்செய்வது எப்படி? அந்தத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் எவை?, தேர்வில் இடம்பெறும் பொதுஅறிவுப் பயிற்சி கேள்விகள், பொதுத்தமிழ் பயிற்சிக் கேள்விகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற குரூப்-2 தேர்வுக் கேள்விகளும், அதற்கான விடைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

“TNPSC போட்டித் தேர்வுகளில் வெற்றி உறுதி...” என்னும் இந்த நூலில் பயிற்சி கேள்விகள் மற்றும் அதற்கான விடைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளதால், தேர்வுத் தயாரிப்பும் மிக எளிதாக அமையும்.


விலை: ரூபாய்.150/-

Post a Comment

புதியது பழையவை

Sports News