சென்னை புத்தகக் கண்காட்சி - ஜனவரி 2019 - நிகழ்வுகள்-புகைப்படங்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி 
ஜனவரி 2019
நிகழ்வுகள்-புகைப்படங்கள்


சென்னையில் மிகப்பிரமாண்டமாக 42வது சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.உடற்கல்வியியல் மைதானத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியினை நடத்துபவர்கள் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க அமைப்பாளர்கள்.

ஜனவரி மாதம் 4ஆம் தேதிமுதல் 20ஆம் தேதிவரை நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் சுமார் 1 1/2 கோடி புத்தகங்களுக்குமேல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.


கருத்தரங்கம்


இந்தப் புத்தகக் கண்காட்சியில் பிரபல புகழ்பெற்ற பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் நாள்தோறும் கலந்துகொள்கிறார்கள். தனியாக அமைக்கப்பட்ட மேடையில் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் நல்ல பழக்கத்தை வளர்க்கும் விதத்தில் நாள்தோறும் சொற்பொழிவுகளும், கலந்துரையாடல்களும் நடைபெற்று வருகிறது.

நெல்லை கவிநேசன் பேச்சு...
 
 

சென்னை புத்தகக் கண்காட்சியின் 9ஆவது நாள் (12.01.2019) அன்றைய நிகழ்வில் பேராசிரியர் நெல்லை கவிநேசன் “நம்பிக்கை நம் கையில்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

கையெழுத்திடும் நிகழ்ச்சி

சென்னை புத்தகக் கண்காட்சியில் தினத்தந்தி பதிப்பகம் சார்பில் 60, 61 ஆகிய 2 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
 
பேராசிரியர் நெல்லை கவிநேசன் எழுதிய “நீங்களும் தலைவர் ஆகலாம்” என்னும் புதிய நூலை  தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதற்குமுன், இவர் எழுதிய “ஆளுமைத்திறன்-பாதை தெரியுது பார்!”, “பழகிப் பார்ப்போம் வாருங்கள்”, “சிகரம் தொடும் சிந்தனைகள்”, “Competitive Examinations and Job Opportunitiesஆகிய புத்தகங்களையும் தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இப்புத்தகக் கண்காட்சியில் தினத்தந்தி அரங்கில் பேராசிரியர் நெல்லை கவிநேசன் 13.01.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிமுதல் மாலை 6மணிவரை அவர் எழுதிய புத்தகங்களை வாங்கும் வாசகர்களுக்கு அதில் கையெழுத்திட்டு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் எழுத்தாளர் நெல்லை கவிநேசன் தனது புத்தகங்களை வாங்கும் வாசகர்களுக்கு கையெழுத்திட்டு வழங்கினார்.

புத்தகக் கண்காட்சி புகைப்படங்கள்...


தினத்தந்தி அரங்கிற்கு வந்த பபாசி தலைவர் குமரன் பதிப்பக உரிமையாளர் திருமிகு.வயிரவன் அவர்களுடன், புத்தக உலகம் ஆசிரியர் திரு.மெய்யப்பன் மற்றும் தினத்தந்தி பதிப்பக மேலாளர் திரு. முத்துநாயகம் ஆகியோர். இவர்களோடு அமீரக கவிஞரும், எழுத்தாளருமான நசீமா அவர்கள் தலைமையில் எழுத்தாளர்கள் காவேரி மைந்தன், துபாய் வானொலி புகழ் கவிஞர் நாகா ஆகிய பிரபலங்கள் நெல்லை கவிநேசனோடு இணைந்து விரும்பி எடுத்த புகைப்படம்.


1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News