பனையேறும் தொழிலில் ஈடுபடும் கல்லூரி மாணவர்

பனையேறும் தொழிலில் ஈடுபடும் கல்லூரி மாணவர்
தன்னம்பிக்கை மாணவரை வாழ்த்தும் வணிக நிர்வாகவியல் துறைப் பேராசிரியர்கள் மற்றும் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர்.ரமேஷ்.

தன்னம்பிக்கையோடு உழைத்து தனது தந்தைக்கு ஆதரவாக பனைத்தொழிலில் ஈடுபட்டுவரும் கல்லூரி மாணவர் அந்தோணி நவராஜா. இவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர். தனது தந்தையின் உடல்நலம் பாதித்ததால், தானே பனைத்தொழிலில் ஈடுபட்டு தனது குடும்பத்திற்கான வருமானத்தையும் ஈட்டி வருகிறார். அதிகாலை 4 மணிக்கே பனையேறும் தொழிலில் ஈடுபடும் இவர், பின்னர் காலையில் கல்லூரிக்கு வந்துவிடுகிறார். மாலையில் கல்லூரி முடிந்தபின்பு மீண்டும் பனைத்தொழிலில் ஈடுபட்டு இரவு நேரம்வரை உழைக்கிறார். அதன்பின்னர், பாடத்தைப் படிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

“செய்யும் தொழிலே தெய்வம்” என்பார்கள். தனது குடும்பத் தொழிலை செய்வது இழிவு என கருதும் காலத்தில் “உழைத்துப் பிழைப்பதை தன்மானம்” என்று நம்பிக்கையோடு வீறுநடை போடுகிறார் அந்தோணி நவராஜா.

இவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் வணிக நிர்வாகவியல்துறைத் தலைவர் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) அவர்களின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னம்பிக்கையோடு வாழ்க்கைப் பயணத்தைத் தொடரும் இளைஞரை நாமும் வாழ்த்துவோமா...

மாலை முரசு தொலைக்காட்சியில் வெளியான மாணவரின் பேட்டி...


 

Post a Comment

புதியது பழையவை

Sports News