ஊட்டியில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்

ஊட்டியில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் 
நெல்லை கவிநேசன்

 


தமிழகத்தின் நம்பர் 1 தமிழ் நாளிதழான “தினத்தந்தி”, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளின் வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் வகையில், பல்வேறு துறைகள்சார்ந்த கல்வி வல்லுநர்களைக்கொண்டு ஆண்டுதோறும் “வெற்றி நிச்சயம்” நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.


“தினத்தந்தி” மற்றும் கோவை, கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி சார்பில் நடைபெற்ற “வெற்றி நிச்சயம்” நிகழ்ச்சி 01.04.2019 அன்று ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை புதுடெல்லி, பல்கலைக்கழக மானியக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் திரு.H.தேவராஜ் தொடங்கிவைத்து தலைமையுரையாற்றினார். “கல்விப்பணியில் தினத்தந்தி” என்ற தலைப்பில் தினத்தந்தி தலைமை பொதுமேலாளர் (புரமோசன்ஸ்) திரு.R.தனஞ்செயன் பேசினார். கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் திரு.N.மோகன்தாஸ் காந்தி மற்றும் இக்கல்லூரியின் துணைத்தலைவர் திருமதி.இந்து முருகேசன் ஆகியோர் வரவேற்றுப் பேசினார்.

தொடக்கவிழா நிகழ்ச்சிகள் முடிந்ததும், மாணவ-மாணவிகளுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் மேற்படிப்புகளுக்கான வாய்ப்புகள்பற்றி - மருத்துவம், பொறியியல், சட்டத்துறை, பட்டய கணக்கியல், வேளாண்மை, முப்படைகளில் வேலை வாய்ப்புகள், நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் ஆகிய தலைப்புகளில் பல்வேறு துறைசார்ந்த கல்வி வல்லுநர்கள் தொடர்ந்து பேசினார்கள். இதில்,“சிவில் சர்வீசஸ் தேர்வு” குறித்து திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் 
நெல்லை கவிநேசன் என்ற டாக்டர்.S.நாராயணராஜன் விளக்கம் அளித்தார். 

இந்நிகழ்ச்சியின் முடிவில் கோவை தினத்தந்தி மேலாளர் திரு.R.சரவணன் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சியை மதுரையைச்சேர்ந்த புலவர், முனைவர்.வை.சங்கரலிங்கம் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில், உணவு இடைவேளையின்போது முனைவர்.G.நன்னிலம் கேசவன் பலகுரல் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.  


 


Post a Comment

புதியது பழையவை

Sports News