திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 1972-1975ஆம் ஆண்டில் பி.பி.ஏ. படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் திரு.மகேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் திரு.ரவிச்சந்திரன் வரவேற்றார்.

முன்னாள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்த பேராசிரியர்கள் திரு.ஆழ்வார், திரு.மோகன் சுயம்புராஜ், திரு.லடிஸ்லாஸ் ரோட்ரிகோ, திரு.பாபுசிவராஜ கிருபாநிதி, திரு.ராஜமார்த்தாண்டம் மற்றும் வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.மச்சேந்திரநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நாகலாந்து மாநில முன்னாள் தலைமை செயலாளரும், கல்லூரி முன்னாள் மாணவருமான திரு.ஜெயக்குமார் பொன்ராஜ், முன்னாள் மாணவர்கள் திரு.ராஜா சந்திரசேகர், திரு.சேவியர் ராஜன், திரு.ஷாய்குமார், திரு.மந்திரம், திரு.அகஸ்டின், திரு.ஸ்ரீதர், திரு.ரவிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னாள் மாணவர் திரு.ஆறுமுகநயினார் நன்றி கூறினார். நிகழச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் திரு.கந்தசாமி, திரு.ரவிச்சந்திரன், திரு.வாசுதேவன் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தி: தினத்தந்தி. 

நிகழ்வு புகைப்படங்கள்

 

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News