27 ஆண்டுகளுக்குப்பின் நெல்லை கவிநேசனிடம் படித்த மாணவர்கள் சந்திப்பு

 27 ஆண்டுகளுக்குப்பின் நெல்லை கவிநேசனிடம் படித்த மாணவர்கள் சந்திப்பு


திருச்செந்துர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1989-92 ஆண்டுகளில் பி.பி.ஏ., படித்த 40 மாணவர்களில் 33 பேர் தற்போது ஒன்றிணைந்துள்ளனர். இவர்களில் வெளிநாடுகளில் உள்ள 6 நண்பர்கள் உள்ளிட்ட 25 பேர் சென்னையில் 2018 இறுதியில் சந்தித்து மகிழ்ந்தனர். தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்தனர். இப்படி ஒரு சந்திப்பு நண்பர்களிடையே பேரானந்தத்தை தந்தது .
பின் ROYAL BBA DOBA FORUM என்ற வாட்ஸ் ஆப் குரூப்பில் அனைவரும் தகவல்களை பரிமாறி வருகிறோம். அதன் பின் ஆங்காங்கே அருகில் உள்ள நண்பர்கள் சந்திக்கும் முயற்சியை நண்பர் இளங்கோ மேற்கொண்டார்.

அவரது அயராத முயற்சியால்  ஜெப சீலன், (திசையன்விளை, ஜெபா மெடிக்கல்ஸ்), கிறிஸ்டோபர், விக்டர் இமானுவேல் (நாகர்கோவில் Deputy, Chief Ticket Inspector), ஆறுமுகம், பழனிச்சாமி (உதவி ஆசிரியர், தினமலர், ராமநாதபுரம்), கணேசன், இளங்கோ (சென்னை, தொழிலதிபர், SEA foods Industries) ஆகியோர் திருச்செந்தூரில் 9.5.2019 மாலை 4.00 மணிக்கு சாந்தி  பேக்கரியில் சந்தித்து மகிழ்ந்தோம்.

பின் எம் கல்லூரியின் தற்போதைய  முதல்வர் திரு. மகேந்திரன் அவர்களை கல்லூரி முதல்வர் அறையில் சந்தித்து உரையாடினோம். சேர்ந்து புகைப்படம் எடுத்தோம். 

 

பின் வளாகத்திலும், அய்யா ஆதித்தனார் சிலை முன்பும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தோம்.



பின் எங்களின் நல் வழிகாட்டியும், எல்லோராலும் நெல்லை கவி நேசன் என்று அழைக்கப்படும் பேராசிரியர் (எஸ்.என்.ஆர்) திரு.நாராயணராஜன் அவர்களை சந்திக்க விரும்பி தொடர்பு கெnண்டோம்.
அவரோ அகம் மகிழ்ந்து சுமார் 3.00 மணி நேரம் எங்களோடு செலவிட்டார்.
ஆதித்தனார் கல்லூரி காந்தி விடுதி இருந்த இடத்தில் கம்பீரமாக அமைந்துள்ள ஓட்டல் சரவணபவன் குளிர் சாதன சொகுசு ஹாலில் எங்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தார். அதன் பின் மற்றொரு அன்பிற்கினிய பேராசிரியர்  லேடிஸ்லால் ரொட்ரிகோ அவர்களை வீரபாண்டியன் பட்டணத்தில் அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

அவரும், துணைவியாரும் எங்களை அன்போடு உபசரித்தனர். வெளிநாட்டு சாக்லெட் வழங்கினர். பின் அங்கிருந்து புறப்பட்டு அவரவர் இல்லம் சேர்ந்தோம்.

இந்த குரூப்பில் எல்லோரும் நல்ல நிலையில் இருப்பதற்காக பேராசிரியர் (எஸ்.என்.ஆர்.) திரு.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) அனைவரையும் பாராட்டினார். 90 சதவீதம் பேர் தொழில் அதிபர்களாக இருப்பதால் தற்போது படிக்கும் மாணவர்களுடன் கலந்துரையாட அழைப்பு விடுத்தார்.
 
27 ஆண்டுகளுக்கு பின் நாங்கள் துள்ளித் திரிந்த கல்லூரி வளாகத்தையும், பேராசிரியர்களையும் சந்தித்த போது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

தொகுப்பு: 
சு.பழனிச்சாமி, உதவி ஆசிரியர், தினமலர், ராமநாதபுரம் .

Post a Comment

புதியது பழையவை

Sports News