சௌநா அறக்கட்டளை நடத்திய திறன் வளர்க்கும் போட்டிகள், பரிசளிப்பு விழா

சௌநா அறக்கட்டளை 
(SOWNA TRUST) 
நடத்திய திறன் வளர்க்கும் போட்டிகள் - பரிசளிப்பு விழா

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தாலுகா, செட்டிகுளம் இந்து நடுநிலைப்பள்ளி மற்றும் சௌநா அறக்கட்டளை (SOWNA TRUST) இணைந்து ஆண்டுதோறும் மாணவ-மாணவிகளின் திறன் வளர்க்கும் போட்டிகள் (Skill Development Competitions) நடத்தி வருகின்றன. 

இந்தப் போட்டிகளில், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப் போட்டி, வினாடி&வினா, தனி நடிப்பு தனி நடனம், கதை எழுதுதல், மாறுவேடப் போட்டி, நினைவாற்றல் போட்டி, நேர்படப் பேசு, சொல்லுங்கண்ணே சொல்லுங்க, பாட்டுப்போட்டி, ஆங்கிலப் பாடல் மற்றும் ஆங்கிலப் பேச்சு போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ&மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு 2019 நடைபெற்ற திறன் வளர்க்கும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி 20.07.2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு இந்து நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. 
இந்த விழாவிற்கு பள்ளி செயலரும், நல்லாசிரியருமான திரு.பெ.காண்டிபன் அவர்கள் தலைமைத் தாங்கினார்கள். 

பட்டிமன்ற பீரங்கி, நகைச்சுவைத் தென்றல், இரண்டாம் கலைவாணர் மதுரை புலவர்.டாக்டர்.வை.சங்கரலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் டாக்டர்.S.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். 

“1971ஆம் ஆண்டுவரை செட்டிகுளம், இந்து நடுநிலைப்பள்ளியில் படித்த எனக்கு ஆங்கிலத்தை அறிமுகப்படுத்திய நல்ஆசான் திரு.காண்டிபன் அவர்கள். 1969ஆம் ஆண்டு எனக்கு ஏ,பி,சி,டி, என்று ஆங்கிலத்தை மூன்றாம் வகுப்பு படிக்கும்போது கற்றுத் தந்தார்கள். 50 ஆண்டுகளுக்குமுன்பு எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கிலம் இன்று எனது வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது” என்றுகூறி தான் படித்த பள்ளியின் சிறப்புகளைக்கூறி நன்றி பாராட்டினார். 

விழாவில் போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்ற 85 மாணவ&மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவ - மாணவிகளின் வளர்ச்சியில் அரும்பாடுபட்டவர்களுக்கு ஆசிரியர்களுக்கு சௌநா அறக்கட்டளையின் தலைவர் திருமதி.நா.சிவசெல்வி நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியில் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுப்பெற்ற ஆசிரியர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களது சேவையைப் பாராட்டி, நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. 

செட்டிகுளம், சௌந்தரபாண்டியனார் ஆங்கிலம் மற்றும் நர்சரி பள்ளியின் செயலர் திரு.N.S.கணேசன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். திருமதி.க.பங்கஜம் அவர்கள், பல் மருத்துவர் டாக்டர்.சௌ.மனோ பிரியா அவர்கள், கணேஷ் பியூல்ஸ் உரிமையாளர் திரு.N.S.G.சௌந்திரபாண்டியன் அவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு.பலவேசம், துணைத்தலைவர் திரு.லிங்கத்துரை, திரு.மிராசு, திரு.என்.பி.கணேசன், பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினர் திரு.நைசிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியை ஆசிரியர் திரு.பெ.சுந்தர் என்ற பெரியநயினார் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார்கள். பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.S.லதா மங்கேஷ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். 

நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏராளமான பெற்றோர்களும், மாணவ - மாணவிகளும் நிகழ்ச்சியில் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது. 

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News