திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் - இளையோர் செஞ்சிலுவைச் சங்க கூட்டம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்
இளையோர் செஞ்சிலுவைச் சங்க கூட்டம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவைச் சங்க சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர்.D.S.மகேந்திரன் தலைமைத் தாங்கினார். விலங்கியல் துறை பேராசிரியர் P.ஆரோக்கியமேரி வரவேற்றுப் பேசினார். வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் டாக்டர்.S.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, “இளையோர் செஞ்சிலுவைச் சங்கம்-ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் பேசினார். கூட்டத்தில் செஞ்சிலுவைச் சங்க தன்னார்வத் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவைச்சங்க திட்ட அதிகாரி, பேராசிரியர் A.அந்தோணி சகாய சித்ரா, பேராசிரியர் G.பார்வதி தேவி ஆகியோர் செய்திருந்தனர். இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவர் செயலாளர் ராஜா நன்றி கூறினார். 

Post a Comment

புதியது பழையவை

Sports News