ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாக இயல் மன்ற தொடக்க விழா

ஆதித்தனார் கல்லூரியில்
வணிக நிர்வாக இயல் மன்ற தொடக்க விழா

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் வணிக நிர்வாக இயல் துறையின் மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. 


வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியரும், மன்றத் தலைவருமான டாக்டர்.M.R.கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தி, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கல்லூரி முதல்வர் டாக்டர்.டி.எஸ்.மகேந்திரன் தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார். வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.S.நாராயணராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாக இயல் துறை பேராசிரியை ஆர்.தெய்வ வீரலட்சுமி கலந்துகொண்டு மன்றத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது–“கல்லூரிகளில் இயங்கும் மன்றம்தான் மாணவர்களின் திறமையை வளர்க்க அடிப்படையாக அமைகிறது.  வணிக நிர்வாகவியல் துறையில் தொடங்கப்படும் இந்த மன்றம் சிறந்த திட்டங்களை வகுக்கவும், சிறந்த அமைப்புகளை உருவாக்கி, வெற்றி பெறவும் உதவும்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

விழாவில் பேராசிரியர்கள் A.தர்மபெருமாள், T.செல்வக்குமார் துறை நூலகர் எம்.முத்துக்குமார், சிவந்தி சமுதாய வானொலி தொழில்நுட்பக் கலைஞர் எஸ்.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.  முடிவில் மன்றத்தின் மாணவர் செயலர் E.அதிபன் நன்றி கூறினார்.

Post a Comment

புதியது பழையவை

Sports News