திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம், திருச்செந்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், கல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் D.S.மகேந்திரன் தொடக்கவுரை ஆற்றினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு.D.ஜெயராமன் வரவேற்றார். 

இதில், சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் திருமதி.N.நட்டார் ஆனந்தி கலந்துகொண்டு பேசினார். தீயணைப்புப் படை வீரர்கள் மாணவர்கள் மத்தியில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி காட்டினர். இளையோர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அதிகாரி டாக்டர்.A.அந்தோணி சகாய சித்ரா நன்றி கூறினார். இதில், ஆதித்தனார் கல்லூரியின் அனைத்து மன்றங்களின் இயக்குநர் டாக்டர்.S.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன், கண்காணிப்பாளர் திரு.ராஜன் ஆதித்தன், சிவந்தி வானொலி தொழில்நுட்ப கலைஞர் திரு.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் பேராசிரியை.பார்வதிதேவி, பேராசிரியை.ராஜ பூபதி, குடிமக்கள் மன்ற திட்ட அதிகாரி பேராசிரியர்.செல்வகுமார், பேராசிரியர்.தர்மபெருமாள், பேராசிரியர்.திலிப்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.















Post a Comment

புதியது பழையவை

Sports News