திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வாழ்க்கைக்கு வழிகாட்டும் பயிலரங்கம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 
வாழ்க்கைக்கு வழிகாட்டும் பயிலரங்கம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை சார்பில் வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிறப்பு பயிலரங்கம் நடைபெற்றது.  



இந்த நிகழ்ச்சியில் சென்னை அகில இந்திய வானொலி இயக்குனர் (செய்தி பிரிவு) திரு.வி.பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.


வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் தலைமைத் தாங்கினார். பேராசிரியை டாக்டர்.அ.அந்தோணி சகாய சித்ரா சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கினார். பேராசிரியர் டாக்டர்.எம்.ஆர்.கார்த்திகேயன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்தினார். 


சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வானொலி இயக்குனர் திரு.பழனிச்சாமி பேசும்போது - “மாணவர்கள் தங்களின் பலம் என்ன? பலவீனம் என்ன? வாய்ப்புகள் என்ன? தடைகள் என்ன? என்பதை தாங்களாகவே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பலவீனங்களையெல்லாம் பலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். எந்தத் தடைகள் இருந்தாலும் அதனைத் தாண்டி முன்னேறுவதற்கு தீவிரமாக உழைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு பயிற்சி வழங்கினார். 


இந்த நிகழ்வில் வணிக நிர்வாகவியல்துறை மாணவர்கள் கலந்துகொண்டார்கள். 

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News