வெற்றி மேல் வெற்றி

வெற்றி மேல் வெற்றி

புத்தகத்தைப்பற்றி…
இளம்வயதிலேயே சிறந்த குறிக்கோள்களை அமைத்து, சீரிய வழிகாட்டல்களைப் பெற்று, சரியான பாதையை அமைத்து தனது கல்விப் பயணத்தை தொடருபவர்கள் வாழ்க்கையில் மிகச்சிறந்த வெற்றியைப் பெறுகிறார்கள்.  பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் படிப்புத் திறனை மேம்படுத்தவும், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கவும் உருவாக்கப்பட்ட நூல்தான் “வெற்றி மேல் வெற்றி”.
சிறந்த முறையில் படிக்க இந்தநூல் வழிகாட்டுகிறது. மேற்படிப்புகளில் என்னென்ன பிரிவுகள் இருக்கிறது? என்பதையும் விளக்குகிறது. மத்திய அரசின் மிக உயர்ந்த பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற பணிகளில் சேருவது எப்படி? என்பதையும் விரிவாக குறிப்பிடுகிறது. பொறியியல் துறையில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகளை மத்திய அரசு வழங்குகிறது என்பதையும் இந்நூல்மூலம் தெரிந்துகொள்ளலாம். தமிழக அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை சந்திப்பது எப்படி? என்கின்ற தகவலையும் இந்தநூல் தருகிறது. 
வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நல்ல கல்வியறிவும், சிறந்த பணியும் தேவை. அதற்கு அடித்தளமிடும் நினைவுக்கலையைப் வளர்ப்பதற்கும் வழிவகைகளையும் இணைத்து இந்தநூல் புதிய வடிவம் பெறுகிறது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மட்டுமல்ல வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க விரும்பும் அத்தனை பேருக்கும் இந்தநூல் நிச்சயம் உதவும் என நம்புகிறேன். 

Post a Comment

புதியது பழையவை

Sports News