வெற்றி உங்கள் கைகளில்

வெற்றி உங்கள் கைகளில்

புத்தகத்தைப்பற்றி…

“அமைதி நிறைந்த வாழ்க்கையே உண்மையான வாழ்க்கை” என்பது மேலை நாட்டு பொன்மொழி. அற்புதமான வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொண்டவர்கள் எளிதில் வெற்றி பெறுகிறார்கள்.
கல்வி மட்டுமே வெற்றியைத்தரும் என்று எண்ணி, சிலர் படிப்பில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு, வாழும் முறையை மறந்துவிடுகிறார்கள்.இதனால்தான் ஜேம்ஸ் ஆடம்ஸ் கல்வியை இரு வகையாகப் பிரித்தார். ஒன்று-பிழைப்பிற்கு வழி சொல்லித்தரும் கல்வி. மற்றொன்று - வாழ வழி சொல்லித்தரும் கல்வி. படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும், நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு சிறந்த நூல்களை படிப்பதும், நல்ல மனிதர்களோடு கலந்துபேசி உரையாடுவதும் மிகவும் துணையாக அமையும். 
“வெற்றி வேண்டும்” என்று ஆசைப்படுபவர்கள் சிறந்த தன்னம்பிக்கை நூல்களைக் கற்று, அதில் குறிப்பிட்டுள்ள நல்ல வழிகாட்டல்களை மனதில் நிறுத்தி, வெற்றிப் பாதையை நோக்கி பயணத்தை மேற்கொள்ளலாம். 
“வெற்றி உங்கள் கைகளில்” என்னும் இந்த நூல் தமிழின் சிறப்புகள், வாழ்க்கை நெறிமுறைகள், இந்திய, தமிழக தகவல்கள், அறிஞர்களின் பொன்மொழிகள், மற்றவர்களோடு பழகும் முறைகள் போன்ற தகவல்களையும், பொதுஅறிவு குறிப்புகளையும் உள்ளடக்கிய அறிவுப் பெட்டகமாக உங்கள் கைகளில் தவழ்கிறது. 
தன்னம்பிக்கையும், பொது அறிவையும் வளர்க்கும் விதத்தில் இந்நூலைப் பயன்படுத்தி பயன்பெறுமாறு அன்போடு வேண்டுகிறேன். 
இந்த நூலிலுள்ள கருத்துக்கள் உங்கள் வாழ்க்கையில் வளம் பெருகவும், நலம் நிறையவும் நிச்சயம் உதவும் என நம்புகிறோம். இந்நூல் வெளிவர உதவியாய் அமைந்த பாசத்திற்குரிய சகோதரர் டாக்டர்.புலவர். வை.சங்கரலிங்கம் அவர்களுக்கும், நூலை வடிவமைத்து வெளியிட்ட சௌநா பதிப்பகத்திற்கும் எனது இதய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  

Post a Comment

புதியது பழையவை

Sports News