‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்

‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்

நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வணிகநிர்வாகவியல் துறை, ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர்) அவர்கள் இன்றும் பாசமுடன் நேசிக்கும் அன்பு உள்ளம் திரு.ரமணகிரிவாசன். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்தவர். படிக்கும்போதே பல்வேறு கலைப்போட்டிகளில் கலந்துகொண்டு பல்கலைக்கழக அளவில் பல பரிசுகளைப் பெற்றவர். 

30 ஆண்டுகள் கடந்தாலும், அடிக்கடி நெல்லை கவிநேசன் அவர்களை நேரில்வந்து சந்திக்கும் நல்ல பண்புள்ளம்கொண்ட நன்றி மறவாத அன்பு மாணவராக இன்றும் திகழ்கிறார். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நடத்திய ‘ADFEST’ என்னும் மாணவர் கலைப்போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கல்லூரியில் தான் வளர்ந்தவிதம் பற்றிய தகவல்களை மகிழ்வோடு பகிர்ந்துகொண்டார். 

‘மெர்சல்’, ‘தெறி’ போன்ற திரைப்படங்களில் பிரபல இயக்குநர் திரு.அட்லி அவர்களோடு இணைந்து பணியாற்றியதை இன்றும் பெருமையோடு நினைத்து மகிழ்கிறார்.

இப்போது ‘பிகில்’ படத்தில் திரு.அட்லி அவர்களோடு இணைந்து கதை வசனம் எழுதி, தனது பெயரை நிலைநாட்டியுள்ளார். அன்பு மாணவர் திரு.ரமணகிரிவாசன் அவர்கள் பல சாதனைகள் புரிய நெல்லை கவிநேசன் வாழ்த்துகிறார். அவரோடு இணைந்து -
                                    - ஆகிய அமைப்புகளும் வாழ்த்துகின்றன.

திரு.ரமணகிரி வாசன் மற்றும் திரு.அட்லி அவர்கள் இணைந்து கதை வசனம் எழுதிய ‘பிகில்’ திரைப்படத்தின் விமர்சனம் மற்றும் பாடலில் திரு.ஏ.ஆர்.ரகுமான் தோன்றும் காட்சி.


1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News