காயாமொழியில் திரு.பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிப்பு

காயாமொழியில் 
திரு.பா.ராமச்சந்திர ஆதித்தனார் 
நினைவு தினம் அனுசரிப்பு

காயாமொழியில் திரு.பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது சிலைக்கு திரு.இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

‘மாலை முரசு’ நிர்வாக ஆசிரியர் மறைந்த திரு.பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, திருச்செந்தூரை அடுத்த காயாமொழியில் உள்ள திரு.பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, அவருடைய மகனும்,‘மாலைமுரசு’நிர்வாகஇயக்குனருமான திரு.இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது நினைவிடத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

திரு.பா.ராமச்சந்திர ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும், திரு.இரா.கண்ணன் ஆதித்தன், அவருடைய தாயார் திருமதி.பங்கஜம் ராமச்சந்திர ஆதித்தன், மனைவி திருமதி.மதுமதி கண்ணன் ஆதித்தன் ஆகியோர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இலவச வேட்டி-சேலைகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில், திரு.பிரேம்வெற்றி, திரு.கீதா பிரேம் வெற்றி, திரு.குமரன், திரு.ராஜே‌‌ஷ் ஆதித்தன், திரு.ரெங்கநாத ஆதித்தன், திரு.விக்கிரம ஆதித்தன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் திரு.எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், ஓய்வுப்பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர்.பாலசுப்பிரமணிய ஆதித்தன்,காயாமொழிகூட்டுறவுச் சங்கத்தலைவர் திரு.தங்கேச ஆதித்தன், திரு.தையல்பாகு ஆதித்தன், திரு.ஜெயக்குமார் ஆதித்தன், திரு.குமரேச ஆதித்தன், திரு.கே.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், திரு.வரதராஜ ஆதித்தன், திரு.சுந்திரகுமார் ஆதித்தன், திரு.எஸ்.எஸ்.ஆதித்தன், திரு.தையல் சுப்பிரமணிய ஆதித்தன், திரு.ராமானந்த ஆதித்தன், திரு.குமரகுருபர ஆதித்தன்,திரு.ஜெயேந்திரஆதித்தன், திரு.பாலதண்டாயுதபானி ஆதித்தன், பத்மதிரு.நாப ஆதித்தன், தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் திரு.சிவபால், காயாமொழி முன்னாள் பஞ்சாயத்துத்தலைவர் (பொறுப்பு)திரு.அப்பாத்துரை, பா.ஜனதா மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி.நெல்லையம்மாள், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வியாபாரிகள் சங்கத்தலைவர் திரு.மாணிக்கநாடார், திருச்செந்தூர் ரோட்டரி சங்கத்தலைவர் திரு.கணே‌‌ஷ்குமார், தொழில் அதிபர் திரு.நம்பிராஜன், தூத்துக்குடி அனைத்து நாடார் நலச்சங்கத்தலைவர் திரு.மனோகர்,செயலாளர் திரு.ஏசுவடியான், திரு.கண்ணன், நிர்வாகி திரு.ராஜசேகர், தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் திரு.அமிர்தலிங்கம், அகில இந்திய தேசிய நாடார் சங்கப் பொதுச் செயலாளர் திரு.விஜயகுமார், திருச்செந்தூர்தொகுதித்தலைவர்வள்ளிவிளைதிரு.வெங்கடே‌‌ஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினத்தந்தி

Post a Comment

புதியது பழையவை

Sports News