சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கில் நெல்லை கவிநேசன்

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கில் 
நெல்லை கவிநேசன்

“தொல்லியல் நோக்கில் உலகத் தமிழர் பண்பாடு” 
பன்னாட்டு கருத்தரங்கு


“தொல்லியல் நோக்கில் உலகத் தமிழர் பண்பாடு” என்னும் பொருளில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் தன்னாட்சி நிதியில், அரசுதவி பெறும் தமிழ்த்துறை, அரசுதவி பெறா தமிழ்த்துறை, சதக்கத் ஆய்விதழ்  மற்றும் ஜெர்மனியைத் தலைமையகமாகக் கொண்ட தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்புடன் இணைந்து  திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 4.10.2019 அன்று நடைபெற உள்ளது.

இக்கருத்தரங்கில் ஆதிச்சநல்லூர் கீழடி அகழ்வாராய்ச்சிகள் குறித்தும் கல்வெட்டுகள், நடுகற்கள், தமிழ் எழுத்துகள் குறித்தும், உலகெங்கும் பரவியுள்ள தொல்லியல் தடயங்கள் குறித்தும், நான்கு தொகுதிகள் விழாவில் வெளியிடப்படுகின்றன. ஜெர்மனி, இலங்கை, கனடா, மலேசிய நாடுகளைச் சார்ந்த ஆய்வறிஞர்கள் பங்கேற்று உரை வழங்குகின்றனர். 

இந்த நிகழ்ச்சியில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் கலைப்புல முதன்மையர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்.ச.மகாதேவன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ்.த.இ.செ.பத்ஹ§ர் ரப்பானி “தொல்தமிழ்” ஆய்வுக் கோவையை வெளியிட்டுத் தலைமையுரையாற்றுகிறார். கல்லூரி முதல்வர் முனைவர்.மு.முஹம்மது சாதிக் மற்றும்  அரசுஉதவி பெறா பாட வகுப்புகள் இயக்குநர் முனைவர்.ஏ.அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். 

கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, ஆட்சிக்குழுப் பொருளாளர் அல்ஹாஜ் ஹெச்.எம்.ஷேக் அப்துல் காதர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் கே.ஏ.மீரான் முஹைதீன், அல்ஹாஜ் வாவு.எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான், அல்ஹாஜ் எம்.கே.எம். முஹம்மது நாசர், பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முஹம்மது நவாப் ஹ§சேன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

ஜெர்மனி, தமிழ்மரபு அறக்கட்டளை தலைவர் முனைவர் க.சுபாஷிணி “ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வும் உலகத்தமிழர் பண்பாட்டுப் பதிவுகளும்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். மேற்குவங்க அரசின்  மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.கோ.பாலச்சந்திரன் மிகிஷி “அகழ்வாராய்ச்சியும் அரசியலும்” என்ற தலைப்பில் நோக்கவுரை வழங்குகிறார். 

கல்லூரி இணைப்பேராசிரியர் முனைவர்.அ.மு.அயூப்கான் அறிமுகவுரை நிகழ்த்துகிறார். மலேசியா புத்ரா பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் முனைவர்.நாராயணன் கண்ணன், “உலகளாவிய தமிழர் பண்பாடு” என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்குகிறார். 

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் “ஆதிச்சநல்லூர்-கீழடி அகழாய்வுகள்” என்ற தலைப்பில் அறிமுகவுரை நிகழ்த்துகிறார். சென்னை, தொல்லியல் நூலாசிரியர் திரு.அமுதன் (எ) தனசேகரன் “ஆதிச்சநல்லூர், கீழடி-மண்மூடிய மகத்தான நாகரிகம்” என்னும் தலைப்பில் ஆய்வுரை வழங்குகிறார். 

இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் (இசைத்துறை) பேராசிரியர் திரு.சி.சூர்யகுமார் “கிழக்கிலங்கை மக்களின் வாழ்வியல்: கிராமியக் கலை வடிவங்கள்” என்னும் தலைப்பில் ஆய்வுரை வழங்குகிறார். கனடா, அண்ணாமலைக் கனடா வளாகத்தின் தமிழியல் துறை மூத்த விரிவுரையாளர் முனைவர்.செல்வநாயகி ஸ்ரீதாஸ் “ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்: முதுமக்கள் தாழிகளும் மக்கள் பண்பாடும்” என்னும் தலைப்பில் ஆய்வுரை வழங்குகிறார். 

எழுத்தாளர், திரு.முத்தாலங்குறிச்சி காமராசு ஆதிச்சநல்லூரி அகழ்வாராய்ச்சி நேற்று-இன்று-நாளை என்னும் தலைப்பில் ஆய்வுரை வழங்குகிறார். 

இக்கருத்தரங்கில், பொறுப்பாளர்களாக முனைவர். அ.சே.சேக்சிந்தா, உதவிப்பேராசிரியர் திரு.ஜெ.குமார், அரசுதவி பெறா தமிழ்த்துறைத் தலைவர் திரு.எம்.சாதிக் அலி ஆகியோர் செயல்படுகின்றனர். வரலாற்று ஆய்வாளர் திரு.செ.திவான் தலைமை வகிக்கிறார். உதவிப்பேராசிரியர் முனைவர். இரா.அனுசியா அறிமுகவுரை நிகழ்த்துகிறார். 

நெறியாளர்களாக முனைவர்.மு.ரா.மஜிதா பர்மின், முனைவர்.செல்வ சுகன்யா, முனைவர்.ஞா.அந்தோணி சுரேஷ் செயல்படுகின்றனர். உதவிப் பேராசிரியர் முனைவர்.வ.மாலிக் அறிமுகவுரை நிகழ்த்துகிறார். திருநெல்வேலி மண்டல தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் திரு.கா.பொ.இராசேந்திரன் கருத்தரங்க விழா நிறைவில் பேரூரை நிகழ்த்துகிறார். 

இக்கருத்தரங்கில் முனைவர்.மு.முஹம்மது சாதிக் மற்றும் முனைவர்.ஏ.அப்துல் காதர் ஆகியோர் சான்றிதழ்-ஆய்விதழ் வழங்குகின்றனர். முடிவில், உதவிப் பேராசிரியர் முனைவர்.தமிழினியன் நன்றியுரை வழங்குகிறார். 

Post a Comment

புதியது பழையவை

Sports News