ஆதித்தனார் கல்லூரி-மருத்துவ முகாம் நிகழ்ச்சி
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கம் ,அரசு மருத்துவமனை மற்றும் சௌநா அறக்கட்டளை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் டி .எஸ் . மகேந்திரன் தலைமை தாங்கினார்.
ஆறுமுகநேரி லைட் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அதிகாரி டாக்டர். ஏ .அந்தோணி சகாய சித்ரா வரவேற்புரை நிகழ்த்தினார். சௌநா அறக்கட்டளையின் தலைவர் சிவசெல்வி முன்னிலை வகித்தார்.
ஆதித்தனார் கல்லூரி செயலர் டாக்டர் ஜெயக்குமார் ,ஆதித்தனார் கல்லூரி அனைத்து மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் .எஸ் . நாராயண ராஜன், அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர். டி.பொன் ரவி , டாக்டர். பாபநாச குமார் ,டாக்டர் .அய்யம்பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கும் அனைத்து முதியோர்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு போதிய மருந்துகளும் வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகளாக பிளாஸ்டிக் சேர்கள், போர்வைகள், பழங்கள் ஆகியவை வழங்கப்பட்டது. அனைவருக்கும் மதிய உணவும்,இனிப்புகளும் வழங்கப்பட்டன.
லைட் முதியோர் இல்லத்தின் பொறுப்பாளர் பிரேம்குமார் ஏற்புரை வழங்கினார்.இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவ செயலாளரும் பிபிஏ மூன்றாம் ஆண்டு மாணவருமான ராஜா நன்றி கூறினார்.
கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்க இணை திட்ட அதிகாரி .டாக்டர் .ஆரோக்கியமேரி பெர்னாண்டஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
கல்வி அளித்து நம் பகுதி மக்கள் வாழ்வில் வளம் சேர்த்து வாழ வைக்கும் நம் கல்லூரியில் உடல் நலத்திற்கு உதவும் சேவைகள் வழங்குதல் அறிந்து அளவிலா மகிழ்ச்சி.. சேவைகள் தொடரட்டும்.. சீரிய முயற்சி.. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்💐💐🥇🙏👋👋👍👍👍
பதிலளிநீக்குகருத்துரையிடுக