ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகள் (Hotel Management) - 8

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகள்  (Hotel Management)
- நெல்லை கவிநேசன்


மேற்படிப்பில் இப்போது பிரபலமாகிவரும் படிப்பு “ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு” ஆகும். 

1. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகள் விவரம்

“ஹோட்டல் நிர்வாகம்“ மற்றும் “கேட்டரிங் டெக்னாலஜி” பாடத்தை எடுத்துப் படித்தவர்கள் இன்று மிக அதிக சம்பளம் வாங்குகிறார்கள். ஹோட்டல் நிர்வாகப் படிப்பில் பல டிப்ளமோ படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளும் உள்ளன. அவை பற்றிய விவரம் - 

1.டிப்ளமோ இன் ஹோட்டல் ஆபரேசனல் மேனேஜ்மெண்ட்  (Diploma in Hotel Operational Management) 
2.டிப்ளமோ இன் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அன்ட் கேட்டரிங் டெக்னாலஜி (Diploma in Hotel Management and Catering Technology)
3.சர்டிபிகேட் கோர்ஸ் இன் பேக்கரி  (Certificate Course in Bakery)
4.சர்டிபிகேட் கோர்ஸ் இன் கேனிங் (Certificate Course in Canning)
5.சர்டிபிகேட் கோர்ஸ் இன் ஹோட்டல் ரிசப்ஷன் அன்ட் ஹவுஸ் கீப்பிங் (Certificate Course in Hotel Reception and House Keeping) 
6.சர்டிபிகேட் கோர்ஸ் இன் ரெஸ்ட்டாரண்ட் அன்ட் கவுண்டர் சர்வீஸ் (Certificate Course in Restaurant and Counter Service) 
7.கிராப்ட்ஸ்மேன்ஷிப் கோர்ஸ் இன் ஃபுட் அன்ட் பீவ்ரேஜ் சர்வீஸ் (Craftsmanship Course in Food and Beverage Service)
8.கிராப்ட்ஸ்மேன்ஷிப் கோர்ஸ் இன் ஹோட்டல் ரிசப்ஷன் அன்ட் ஹவுஸ் கீப்பிங் (Craftsmanship Course in Hotel Reception and House Keeping)
9.கிராப்ட்ஸ்மேன்ஷிப் கோர்ஸ் இன் ஃபுட் புரொடக்ஷன் (Craftsmanship Course in Food Production)
10. சர்டிபிகேட் கோர்ஸ் இன் குக்கரி (Certificate Course in Cookery)
11. சர்டிபிகேட் கோர்ஸ் இன் ஹவுஸ் கீப்பிங் (Certificate Course in House Keeping)
12. சர்டிபிகேட் கோர்ஸ் இன் ஃபிரண்ட் ஆபிஸ் மானேஜ்மெண்ட் (Certificate Course in Front Office Management) 
13. சர்டிபிகேட் கோர்ஸ் இன் ஃபுட் சர்வீஸ் மானேஜ்மெண்ட் (Certificate Course in Food Service Management)
- இப்படி பல்வேறு படிப்புகள் உள்ளன. 

முன்பெல்லாம் சமையல் செய்வது பெண்களின் வேலை என எண்ணிச் சமையல் வேலையை பெண்களுக்கே ஒதுக்கி வைத்திருந்தார்கள். ஆனால், இப்போது இந்நிலை எவ்வளவோ மாறிவிட்டது. 

கல்யாண சமையல் வேலைகளை - ஆண் சமையல்காரர்களே கவனித்துக் கொள்கிறார்கள். வீட்டில்கூட ‘சமையல் அசிஸ்டெண்ட்’ ஆகப் ஆண்கள் பணிபுரிய வேண்டிய நிலை உருவாகிவிட்டது. 

எனவே - வேலை வாய்ப்புக்கு மட்டுமின்றி சுவையான சத்தான உணவை வீட்டில் தயாரிக்கவும், சமையல் கலையை முறைப்படி கற்க வேண்டியது அவசியமாகிவிட்டது. 

“ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அன்ட் கேட்டரிங் டெக்னாலஜி” என்ற மதிப்பு மிகுந்த படிப்பைப் பற்றி இன்னும் சிலர் சரியாகப் புரிந்துகொள்ளாமல்தான் இருக்கிறார்கள். 

இப்போதுள்ள இளைஞர்களுக்கு இந்தப் படிப்பு நிச்சயம் வேலை வாய்ப்பினைத் தரும் என்பதால் இதனைப் பற்றிச் சற்று விரிவாகவே நாம் சிந்திக்க வேண்டும்.

இந்தியாவிற்கு வருடந்தோறும் சுமார் 17 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் வருகிறார்கள். தற்போதுள்ள ஐந்து மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும் சுமார் 45,000 அறைகள் உள்ளன. இனி, அரசின் கொள்கையால் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். எனவே இந்தியாவில் இன்னும் பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைத் திறக்க வேண்டிய நிலை உருவாகும். இதனால், இந்தப் பெரிய ஹோட்டல்களில் வேலை செய்ய நிறைய பேர் தேவைப்படுவார்கள்.

மேலும், இப்போது பெரிய நகரங்களில் தேநீர் விருந்துகளையும், கல்யாண விருந்துகளையும் மிகப்பெரிய ஹோட்டல்களிலேயே நடத்துகிறார்கள். பெரிய அலுவலகங்களின் கூட்டங்கள்நடத்துவதற்கும், அதிகாரிகள் தங்குவதற்கும் ஹோட்டல்கள் பயன்படுகின்றன. இவைதவிர “வகை வகையான உணவினை உண்ண வேண்டும்“ என்பதைவிட “கொஞ்சம் ரிலாக்ஸ் (Relax) ஆக இருப்போமா?” என எண்ணுபவர்கள் அதிகமாகிவிட்டார்கள். 

இந்தக் காரணங்களால், இனிவரும் காலங்களில் ஹோட்டல் மானேஜ்மெண்ட் படிப்பவர்களுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. 
ஹோட்டல் வேலை தவிர விமானத்தில் பணிபுரியவும், பெரிய மருத்துவமனைகளில் தரமான உணவுகளை வழங்கும் பணியில் ஈடுபடவும் ‘ஹோட்டல் மேனேஜ்மெண்ட்’ படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். 

2. ஸ்டேட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து நடத்தும் “ஸ்டேட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அன்ட் கேட்டரிங் டெக்னாலஜி” (State Institute of Hotel Management and Catering Technology) திருச்சியை அடுத்துள்ள துவாக்குடி என்னும் இடத்தில் உள்ளது. 

இங்கு - டிப்ளமோ இன் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அன்ட் கேட்டரிங் டெக்னாலஜி (Diploma in Hotel Management and Catering Technology) என்ற டிப்ளமோ படிப்பு நடத்தப்படுகிறது. இது 3 வருடப் படிப்பு ஆகும். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேரலாம். பிளஸ் 2 தேர்வில் குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு 22 ஆகும். இந்த படிப்புப் பற்றிய அறிவிப்பு ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் வெளியிடப்படும். 

இங்கு ஒரு வருடப் படிப்பாக ‘பிரண்ட் ஆபிஸ் புக் கீப்பிங் அன்ட் ஹவுஸ் கீப்பிங்’ (Front Office Book Keeping and House Keeping)  என்ற வகுப்பு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேரலாம். ஆங்கிலத்தில் 50 சதவிகித மதிப்பெண்களும், இதரப் பாடங்களில் சராசரியாக 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 

வொகேஷனல் (Vocational) பாடம் எடுத்து பிளஸ் 2 படித்தவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலும், நேர்முகத் தேர்வின் (Interview) அடிப்படையிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

இங்கு நடத்தப்படும் இன்னொரு, ஒரு வருடப்படிப்பு ‘புட் புரொடக்ஷன்’ (Food Production) ஆகும். பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றவர்கள் இதில் சேரத் தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 

‘ஃபுட் அன்ட் பீவரேஜ் சர்வீஸ்’ (Food Beverage Service) என்னும் படிப்பும் இங்கு நடத்தப்படுகிறது. இதிலும் பிளஸ் 2 தேர்வில் சராசரியாக 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதுவும் ஓராண்டுப் படிப்பு ஆகும். பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 

இங்கு “பேக்கரி அன்ட் கன்பெக்சனரி” (Bakery and Confectionery) மற்றும் ஹவுஸ் கீப்பிங் (House Keeping) என்ற படிப்புகளும் கற்றுத்தரப்படுகின்றன. எஸ்.எஸ்.எல்.சி.யில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

சென்னை ‘தி சவுத் இண்டியா ஹோட்டல் அன்ட் ரெஸ்டாரண்ட்ஸ் அசோசியேஷன்’ (The South India Hotels and Restaurants Association) மற்றும் சென்னை ‘தி தமிழ்நாடு பேக்கர்ஸ் பெடரேஷன்’ (The Tamilnadu Bakers Federation) ஆகிய அமைப்புகள் பரிந்துரை செய்யும் மாணவர்கள் சிலரும் இதில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் விவரங்களுக்கு - 
State Institute of Hotel Management and Catering Technology, 
Thuvakkudy, 
Trichy - 620 015  
-என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 

3. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பும், பெண்களும்

“ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளெல்லாம் பெண்களுக்கு ஏற்றதுதானா? ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு படிக்கப் பெண்களை அனுப்பலாமா?” இது பலரின் கேள்வி. 

இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது. விமானியாகவும், பஸ் டிரைவராகவும்கூடப் பெண்கள் பணியாற்றத் தொடங்கிவிட்டார்கள். 

இதேபோல, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புப் படிக்கவும் நட்சத்திர ஹோட்டல்களில் பணியாற்றவும் பல பெண்கள் முன்வந்துள்ளார்கள்.

பொதுவாகவே, பெண்களுக்கு விருந்தோம்பல் குணம் அதிகம் உண்டு. வீட்டுக்கு வரும் விருந்தினர்களை அன்போடு உபசரிக்கும் இந்தக் குணம் நட்சத்திர ஹோட்டல்களில் மிகவும் அவசியம். எனவே நட்சத்திர ஹோட்டல்களில் ‘ஹோட்டல் எக்ஸிகியூட்டிவ்’ (Hotel Executive), ‘கெஸ்ட் ரிலேஷன் எக்ஸிகியூட்டிவ்’  (Guest Relation Executive), ‘சேல்ஸ் என்ஸிகியூட்டிவ்’ (Sales Executive), ‘பிரண்ட் ஆபிஸ் அசிஸ்டெண்ட்’ (Front Office Assistant), ‘புளோர் சூப்பர்வைசர்’  (Floor Supervisor) போன்ற பல பணிகளில் வேலை வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. 

இவைதவிர, இடைநிலை மற்றும் உயர்நிலை மேலாண்மைப் பணிகளிலும் பணியாற்ற பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. 

“ஹோட்டல்களில் வேலை கிடைத்தாலும் கல்யாணம் ஆகிறவரைதானே அவர்கள் அங்கு வேலை செய்ய முடியும்?“ என எண்ணி ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு முடிந்த இளம் பெண்களின் பெற்றோர்கள் வேலைக்கு அனுப்ப மறுக்கிறார்கள். இந்த எண்ணம் இனி வரவேண்டிய தேவையே இல்லை. 

பெண்களை மிகவும் பாதுகாப்பாக நட்சத்திர ஹோட்டல்களில் நடத்துகிறார்கள். பணிக்கு வரும் பெண்களை இரவு நேர ஷிப்ட்களில் (Night Shift) பணியாற்ற பெரும்பாலான ஹோட்டல் நிர்வாகத்தினர் அனுமதிப்பதில்லை. மேலும், தனியான உணவு அறை, பெண் பாதுகாவலர் போன்ற வசதிகள் உள்ளன. வேலைமுடிந்ததும் வீட்டில் கொண்டு விடுவதற்கு வேண்டிய போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்படுகின்றது. திருமணமான பெண்கள் தங்கள் குழந்தைகளைக்கூட வேலை செய்யும் ஹோட்டலுக்குக் கொண்டுவந்து அங்குள்ள குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிடலாம்.

இத்தகைய வேலை வாய்ப்பு வசதிகள்கொண்ட ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளில் இப்போது நிறைய பெண்கள் விரும்பி சேருகிறார்கள். 

பெண்களைப்போலவே ஆண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளைத் தரும் வகையில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு அமைந்துள்ளது. 

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர்களுக்கு இன்று உலகில் பல பகுதிகளில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன. உணவகங்கள், விருந்தினர் மாளிகைகள், சுற்றுலா தலங்கள், கப்பல்கள், விமானங்கள், இரயில்வே போன்ற பல துறைகளில் வேலை வாய்பப்கள் இருப்பதால் பி.எஸ்சி., ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அன்ட் கேட்டரிங் டெக்னாலஜி என்னும் மூன்று ஆண்டு படிப்பிலும் பல மாணவர்கள் விரும்பிச் சேருகிறார்கள்.

Post a Comment

புதியது பழையவை

Sports News