எண்ணமும் எழுத்தும் - தொடர் 5.


எண்ணமும் எழுத்தும் - தொடர் 5.

ஒரே பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுல...
 மூணு பேரு தலையா ???

70..களில்.. ஸ்ரீகொப்புடையம்மன் பூச்சொறிதல் தெருவுக்குத் தெரு விழாக்கோலம்!

காரைக்குடி ...மகர்நோன்புப் பொட்டல்ல்ல...கரண்டு கட்டான நேரத்துல கூட மைக் இல்லாமலே ராஜபார்ட்..NN கண்ணப்பா.. வோட ஹை டெசிபலில் அரிச்சந்திராவைக் கேட்க காலையிலே...பாய் விரித்து.. இடம் பிடிக்கும்... பிரிமியம் தட்கால் ரிசர்வேசன் ஸிஸ்டம் போல!....அருகில் புகை கக்கும் காண்டா விளக்கின் மஞ்சள் ஒளியின் ஓவர்லே லேயர் ஸ்டைலில் ரோஸ் கலர் முட்டாய்ஸ்களால் (y100%+m 100%+k20) ரத்தச் சிவப்பான...வாயோரங்கள்!
கல்லுக்கட்டி வடக்கில்... ஆளுயர ட்ரம்ஸ் சகிதம் சென்னை சினிமா புகழ் இன்னிசை கச்சேரி...அந்த இசையை முழுமையாக அவதானிக்க விடாதபடி கிருஷ்ணன் கோவில் அருகில் கடைவிரித்த  பலாச்சுளை வாசம் ...கண்ணன் பஜாரில்..தொன்னையில் சுண் டல்.....(கடுகும்... கருவேப்பிலை.. மொளகா... அளவா... அழகா..) பானக்கத்துடன் ... இவையாவும் இலவச வெர்சன்ஸ்..
நெக்ஸ்ட்திருவிழா காசு…!
year ending  உண்டியல் உடைக்கக் கூச்சப்படாத ஸ்கூல் பருவம்! 45 காசு பெஞ்ச் டிக்கட்...25 காசு கடலைமிட்டாய் பாக்கெட் என சுதந்திர செலவு ஒரு வகை திரில் கலந்த சுகம்!
எல்லா கச்சேரி கரகாட்டக் கலைஞர்கள் களைத்த பின் நடு இரவு காட்சியாக...1-30 AM க்கு ஸ்டார்ட் ஆவும்! (எல்லா டிக்கட்டும் பெரும்பாலும் ஒரே ரேட் ) ஈஸ்ட்மேன் கலர் சிவாஜி நடித்த சிவந்த மண் பட்டத்து ராணி பாட்டு ஸீன்லதியேட்டரே 15 சவுக்கடிகளை சத்தம்போட்டு கொடுத்த கவுண்ட் டவுன் இன்னும் காதுகளில்... (ஆனாதியேட்டர் சரஸ்வதியோ ...நடராஜா டாக்கீஸான்னு தான் தெர்ல) அப்படியாக  அன்றைய மீதி இரவைக் கழித்தவர்களால் அதிகாலை முதல் பஸ் எல்லாத் திசையிலும் தெணறும்!விட்டெரிந்தால்...உள்ள்ங்ங்ங்கை நோக்கி திரும்பி வரும்..ரப்பர் நூல் இணைத்த இன்ஜெக்‌ஷன் மோல்டிங் ரப்பர் பந்து உடம்புல பட்டா கூட அவ்ளவா வலிக்காது. (மெரினா உள் நடைபாதையில் கிரிக்கெட் பந்து பட்டு..ஒரு விபரீதம் நடந்ததில்ல்ல்..சில வருடங்களாக கிரிகெட் விளையாடத் தடை...என்னும் செய்திக்கும்...இந்தக் கட்டுரைக்கும் ஒருசம்பந்தமும் இல்லை)... பேக்கரி டிசோட்டா...தூள் கேக்...மணிக்கூண்டு அருகில் ஜோதிமணி கடையில் தீப்பெட்டி லேபிள் கட்டு...டிக்கி டிக்கி..என ஒலியெழுப்பும் ஒரு கையடக்கத் தகடு ...இதெயெல்லாம் ஒதுக்கிவைக்கும் ஒருஎன்னும் நடமாடும் பெட்ரோமேக்ஸ் லைட் விளம்பரத் தலையர் வினியோகித்த வாசன்&...skcசாமி ஸ்டுடியோ விளம்பரம்பிட் நோட்டீஸ் எங்கள் கைகளில்..... வித்தியாசமாய் யோசிக்கவெச்சது-


திருவிழாஆஃபர்...6 ரூபாய்க்கு 3 காப்பி. பாஸ்போர்ட் போட்டோ படம் தரப்படும் (ரெண்டு (நாலு நாள் கழிச்சே.போட்டோ கைக்கு வரும் காலம்..) நாங்கள் வித்தியாசமான சிந்தனை கொண்டவர்கள் என்பதற்கு...இங்கி பிங்கி எதுவும் போடாமல்.. வாசன் .ஸ்டுடியோவுக்குள் நொழைஞ்சப்போ...போய் பெரிவங்க யாராச்சும் கூட்டிட்டு வாங்கன்னு 3 பேரும் விரட்டிவிடப் பட்ட்டோம்...அந்தமன உளைச்சலுக்கு மருந்து தடவப்பட்ட இடம் அதே செக்காலை ரோடு SKC ஸாமி ஸ்டுடியோ. (என் தாத்தா பல் டாக்டர் கே எஸ்.  சிதம்பர ஆச்சாரி தங்கப் பல் ஸ்பெஷலிஸ்ட்... பெயர் சொன்னதும்சமீபத்தில் குடும்ப புகைப்படம் எடுத்த வகையில்ஒரு அனுசரணை )


அதுலயும் ஒரு சிக்கல்...யாருக்கு பாஸ்போர்ட் போட்டோங்கிற  கேள்விக்கு...ஒரே பாஸ்போர்ட் போட்டோல... எங்க 3 பேரு மொகமும் வரணும்...என்ற என்னைப் பார்த்து நல்ல வேளை அவுக கோவப்படலை...அவர் ஆச்சரியப்பட்டு..டேய் அது பாஸ்போர்ட் சைஸ் இல்லபா ...கேபினட்டு (அந்தஸ்து கொண்டது.) 12 ர்ர்ரூவா.. ஒர்ரே காப்பிதான்  முடியும் என்று... நோட்டீஸ்ல இல்லாத புது கண்டிசன்ஸ் அப்ளையை எங்கள் மேல் அப்ளை பண்ணார்...அதை அவரு ஒரு கனிவான புன்னகையுடன் சொல்லலைன்னா...இந்த 50 வருட வரலாற்றுப் புகைப்படத்துக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
அப்பவே HIJACKED news என்று சித்திக் போட்ருந்த துபாய் சட்டை (அப்பவே)..ஒரு ஹைலைட்..அட்ராக்‌ஷன்..#.ஹைஜாக் என்ற 69 களின் நியூஸ் பிரிண்ட் எழுத்துகள் போட்டோவுல அப்டியே விழுமான்னு நான் கேட்டதுல...வியாபார விதிகள் யாவும் விலக்கிக் கொள்ளப்பட்டு...இந்தப் படம் சாத்தியமானது...மேலே சொல்லப்பட்ட வஸ்துகள் எதையும் வாங்கிச் செலவு செய்யாமல்...அதே சமயம் வீட்டுக்குத் தெரியாமல் எடுத்த முதல் புகைப்படம்.

பின்னாளில் தாஜ் முகமது எதற்கோ மொறைச்சுகிட்டான். பின்னர் உள்ளூர் டாக்டராகி விட... காலியான இட்லர் கடை மேல்ச் சுவர்ல தாஜ் கிளினிக்என்று பெயிண்ட் அடிச்சு எழுதவேண்டிய கட்டாய்த்தில் திரும்ப வந்தான்....சாரம் கட்டி ஆஸ்பிட்டல் நேவி ப்ளூ ப்ளஸ் நூலடிச்சு...
தாஜ் கிளி...
வரைக்கும் எழுதிட்டு ஒரு...ரெண்டு நாள் ஆறப்போட்டேன்...! மியூச்சுவல் ஃப்ரெண்டு லிஸ்ட் + ஃபேஸ் புக் + வாட்சாப் ஸ்டேட்டஸ் + ...கம்ப்யூட்டரே இல்லாத  70 களில் உள்ளூரில் மற்றும் பக்கத்து கிராமம் வரை அது வைரலானது! சமீபத்தில் அந்தச் சிறுபிள்ளைத் தனத்தை எண்ணி வருத்தப்பட்டதை அவனிடம் சொல்ல மன்னிப்புக் கேட்கலாம் என எண்ணிய போதில் அதைக் கேட்க அவன் இவ்வுலகில் இல்லை2 கருத்துகள்

 1. ஆஹா.
  சரளமான நடை.
  எள்ளல் துள்ளல் சூப்பர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊக்குவிக்கும்...தொடர்ந்த உற்சாகமளிக்கும் உங்களின்
   அவதானிப்புக்கும் பாராட்டுக்கும் என் நன்றி!

   நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News