எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


என் அன்புக்குரிய பிரபல எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என்னைப் பற்றி முகநூலில்
குறிப்பிட்டது என்னை நெகிழ வைத்தது. பிரபல எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு  குறிப்பிட்ட தகவல் இது


கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம் எழுத்துலகில் என்னை மெருகேற்றும் ஆசான்.  நான் எழுதும் கட்டுரையை வெளியிடும்  பத்திரிக்கை ஆசிரியராக, என்னை மேம்படுத்த பல முன்னணி பத்திரிக்கையில் அறிமுகப்படுத்துவதில் தந்தையாக, என் தவறுகளை  என்னிடம் சுட்டி  கூறுவதில் நண்பராக.  என்னை பெருமைபடுத்தி அழகான  சிம்மாசனத்தில் அமர வைக்க துடிக்கும்  எனதருமை மந்திரியாக விளங்கும் அய்யா நெல்லை கவிநேசன் என்னை சந்தித்து எனக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். 

அவருக்கு நான் ஈடாக என்ன செய்யமுடியும் ? 

என்னுடைய தென்னாட்டு ஜமீன்கள் நூலை தான் பரிசாக கொடுத்தேன். வருடத்தின் முதல் நாள்   பாளையங்கோட்டை சரவண ஹோட்டலில் அவரோடு அமர்ந்து  காப்பி சாப்பிட்டது என் வாழ்வில் மேலும் ஒரு பேரானந்தம். 

என்னோடு உதவியாக இருக்கும் பேரன் நாட்டார்குளம் எஸ்.கே. திருப்பதியும், சிஷ்யர் சுடலைமணி செல்வனும் உடன் இருந்தது மேலும் எனக்கு பெருமை.

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி அவர்களுக்கு எனது இதய நன்றி


Post a Comment

புதியது பழையவை

Sports News