திருச்செந்தூரில் SOWNA அறக்கட்டளை        
திருச்செந்தூரில் 
 SOWNA அறக்கட்டளை


திருச்செந்தூரில் இயங்கிவரும் SOWNA அறக்கட்டளை பல்வேறு சமூக சேவை பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றது.

 2015ஆம் ஆண்டு முதல் திருச்செந்தூரில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி, இலவச கல்வி ஆலோசனை வழங்குதல், மேற்படிப்புக்கான தனி வழிகாட்டல், போட்டித்தேர்வுக்கான பயிற்சிகள் , திறன் வளர்க்கும் போட்டிகளை நடத்தி பரிசு வழங்குதல் போன்ற பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகிறது.
 2020 ஜனவரி 14  நாள் காலை 8 மணி அளவில் திருச்செந்தூர் இந்து துவக்கப் பள்ளியில் கல்லூரி  மாணவிகளுக்கான பாதயாத்திரை வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி சாரதா கல்லூரியின் அம்பாஅவர்கள் தலைமை தாங்கினார்.

 SOWNA அறக்கட்டளையின் தலைவர், திருமதி .என் சிவசெல்வி அனைவரையும் வரவேற்றார்.

இந்து துவக்கப் பள்ளியின்  நிர்வாகியின் மனைவி பூங்கோதை என்ற மாரியம்மாள் அனைவரையும் வரவேற்றார் .
இந்நிகழ்வில் நெல்லை கவிநேசன் எழுதிய டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான வழிகாட்டல் நூல் போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் திவ்யா என்ற முன்னாள் மாணவிக்கு பரிசாக வழங்கப்பட்டது .

சாரதா கல்லூரியிலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்த மாணவிகள் அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் திருச்செந்தூர் முருகன் ஸ்டோர்ஸ் உரிமையாளர்          திரு. முருகன், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் ஹெட்கேவர் ஆதித்தன், இந்து துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை M.சங்கரி என்ற பானுமதி ,ஆசிரியர்கள் மற்றும் நெல்லை கவிநேசன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து துவக்கப்பள்ளியின் நிர்வாகி    திரு. ராஜமாதங்கன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்Post a Comment

புதியது பழையவை

Sports News