புவியியலைத் தெரிந்துகொள்வோம்-10

புவியியலைத் தெரிந்துகொள்வோம்
- நெல்லை கவிநேசன்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வில் பொதுஅறிவுப்பாடம் (General Studies) முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுஅறிவுப் பாடம் - வரலாறு, புவியியல், பொது அறிவியல், இந்திய அரசியல், பொருளாதாரம், தற்கால நிகழ்வுகள் ஆகியவற்றின் தொகுப்பாக அமைகிறது. 
 
பொதுஅறிவுப் பாடத்தில் இடம்பெறும் “புவியியல்” பாடம் பற்றிய விளக்கங்களைப் பார்ப்போம். 

2. புவியியல் (Geography)
 
புவியியல் பாடத்தை விரிவாக தெரிந்துகொள்வதன்மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வை சிறப்பாக எழுத இயலும். புவியியல் பாடத்தை - Physical Geography, Human Geography, Economic Geography, Development of Geographical Thought, Cartography, Geography of the world ஆகிய முக்கியத் தலைப்புகளில் அணுகுவது சிறந்ததாகும். குறிப்பாக - நாட்டுவளம், மக்கள்தொகை, தட்பவெப்பநிலை, வேளாண்மை போன்ற பல்வேறு தலைப்புகளில் புவியியல் பாடத்தை படிப்பது நல்லது. கனிம வளங்கள், ஐந்தாண்டுத் திட்டங்கள், வணிகம் போன்றவற்றையும் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். 

உலக அளவிலுள்ள ஏரிகள், புல்வெளிகள், நீர்வீழ்ச்சிகள், அணைகள், மலைகள், போன்ற பல தகவல்களையும் சேகரித்துக்கொள்ள வேண்டும். வரைபடங்கள் (Maps) உதவியோடு இவற்றை படிப்பது நல்லது. 

சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவுப் பாடத்தில் இடம்பெறும் புவியியல் (Geography) பாடத்தில் புவியியல் பற்றி சுமார் 8 முதல் 10 வரையிலான கேள்விகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சில குறிப்பிட்ட ஆண்டுகளில் புவியியல் கேள்விகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 
 
குறிப்பாக புவியியல் அமைப்பு, நிலநடுக்கம், பாறைகள், நிலம் உருவாகுதல், வான்வெளி, காற்று, ஈரப்பதம், புயல், புவியியலை அறிய உதவும் கருவிகள், உலக தட்பவெட்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள், கடல்சார் தகவல்கள், முக்கிய தாதுக்கள், இந்திய வேளாண்மை ஆகிய பல பிரிவுகளில் இருந்து கேள்விகளை கேட்க வாய்ப்புள்ளது. 

இந்த தகவல்களையெல்லாம் பல புத்தகங்கள் மற்றும் இணையதளங்கள் உதவியோடும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், உலக வரைபடம், இந்திய வரைபடம், தமிழக வரைபடம் ஆகிய வரைபடங்களை பெரிதாக வாங்கி தனியாக உட்கார்ந்து படிக்கும் அறையின் சுவரில் தொங்கவிட்டுக்கொண்டு நாள்தோறும் இவைகளைப் பார்த்து குறிப்பிட்ட புவியியல் தகவல்களை மனதில் நிறுத்திக்கொள்வது நல்லது. 

இவைதவிர, தற்கால நிகழ்வுகளை புவியியல் கலந்த அரசியல் பார்வையுடனும் கூர்ந்து கவனிப்பது நல்லது. இப்போதெல்லாம் புவி அரசியல் (Gio Politics) மிக முக்கியமான புவியியல் தகவல்களை வழங்குவதால் இதுபற்றிய தேவையான தகவல்களையும் முன்கூட்டியே சேகரித்து வைத்துக்கொள்வது தேர்வு எழுதுவதற்கு மிகவும் உதவியாக அமையும்.  
சமீபத்தில் நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவுப் பாடத்தேர்வில் புவியியல் பாடத்திலிருந்து 15 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதால், அதிக கவனத்தோடு புவியியல் பாடத்தை அணுகுவது நல்லது. 

புவியியல் பற்றி அறிந்துகொள்ள உதவும் நூல்கள் : -
1. Physical Geography of India for VII – XII std. -  NCERT
2. General Principles of World Geography - Charles Farro
3. Monsoon Asia - Charles Farro.
4. Physical Geography of India - C.S. Pichamuthu (NBT)
5. Principles of Geography – Part I & II for XIIth std. (Old ones). - (NCERT)
6. Population Geography - R.C. Chandana.
7. Human Geography - Masjid Hussain.
8. Geography of India - Gopal Singh
9. Geography of India  – Xth Std. - (NCERT)
10. Land and the people – VIth, VIIth, VIIIth, std - (NCERT)
11. Economic and Commercial Geography of India - Sharma & Cotinho
12. India – A comprehensive Geography - Khullar

புவியியல் பாடம் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள மேலே குறிப்பிட்டுள்ள நூல்கள் உதவியாக அமையும். அந்த நூல்களின் துணையோடு முறையான தயாரிப்பை மேற்கொண்டால், மிகச்சிறந்த மதிப்பெண்களைப் பெறலாம். 
கடந்த சில ஆண்டுகளில், சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வின் புவியியல் பாடத்தில் கேட்கப்பட்ட சில முக்கிய கேள்விகளைப்பற்றி பார்ப்போம். 

1. Which one of the following statements is NOT correct?
(a) Mahanadi River rises in Chhattisgarh
(b) Godavari River rises in Maharashtra
(c) Cauvery River rises in Andhra Pradesh
(d) Tapti River rises in Madhya Pradesh

2. Consider the following statements:
(i) The forest cover in India constitutes around 20% of its geographical area, out of the total forest cover, dense forest constitutes around 40%
(ii) The National Forestry Action Programme aims at bringing one-third of the area on India under tree/forest cover.
Which of the statements given above is / are correct?
(a) (i) only               (b) (ii) only                  (c) Both (i) and (ii)             (d) Neither (i) nor (ii)

3. Consider the following geological phenomena
(1) Development of a fault
(2) Movement along a fault
(3) Impact produced by a volcanic eruption
(4) Folding of rocks
Which of the above cause earthquakes?
(a) (1), (2) and (3)     (b) (2) and (4)           (c) (1), (3) and (4)                (d) (1), (2), (3) and (4)

4. Consider the following statements:
(1) Molasses is a by – product of sugar production process.
(2) Bagasse obtained in the sugar mills is used as a fuel in the boilers to generate steam for the sugar factories.
(3) Sugar can only be produced from sugarcane as the raw material.
Which of these statements are correct?
(a) (1) and (2)           (b) (2) and (3)            (c) (1) and (3)                    (d) (1), (2) and (3)

5. Match List I with List II and select the correct answer using the codes given below lists.
           List I (Minerals)          List II (Major Producer)
A. Mineral Oil                     1. Zambia
B. Copper                          2. Guyana
C. Manganese                  3. Venezuela
D. Bauxite                         4. Gabon
Codes :
      A B C D
(a) 3 1 4 2
(b) 3 1 2 4
(c) 1 3 2 4
(d) 1 3 4 2

6. Match List I (Naturally occurring substances) with List II (elements) and select the correct answer using the codes given below the list:
                  List I                 List II
A. Diamond         1. Calcium
B. Marble            2. Silicon
C. Sand              3. Aluminium
D. Ruby              4. Carbon
Codes :
      A B C D
(a) 3 1 2 4
(b) 4 2 1 3
(c) 2 1 3 4
(d) 4 1 2 3

விடைகள்
1. (c)              2. (b)         3. (c)          4. (a)           5. (a)              6. (c) 

Post a Comment

புதியது பழையவை

Sports News