வள்ளலார் சிந்தனைகள்
புலவர். டாக்டர்.சங்கரலிங்கம்
திரு அருட்பிரகாச வள்ளலார் ,இந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் அற்புதமான திரு அருட்பா என்ற நூலை தந்தவர்.
அவரால் பல்வேறு செய்திகள் நாம் அறிந்து மகிழ்ந்தோம் !நாம் வாழக்கூடிய வாழ்க்கையிலே இயற்கையாக வாழ வேண்டுமென்று விரும்பியவர். இயற்கையை மிகவும் நேசித்தவர் இன்பமான வாழ்க்கை வேண்டும்; என்று அனைவரையும் அழைத்தவர்.
"அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை" என்று இறைவனை நேசித்தவர். நாம் விரும்பிய பல்வேறு பாடல்களை தந்து பெருமை சேர்த்தவர்.
"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடியவர். அதுமட்டுமல்ல, இறைவனை "அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே" என்று கூறியவர் .
ஜோதி வேண்டுமென்று சமரச சன்மார்க்கத்தை இந்த மண்ணிலே நிலைநிறுத்தி வாழ்ந்தவர். இருக்கும் காலம் முழுவதும் நம்பிக்கையை தந்து உலகிற்கு ஒளியாய் திகழ்ந்தவர்.
அவர் கேட்பது என்ன தெரியுமா?
"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்"என்று அன்பினை வெளிக்காட்டி வாழ்ந்தவர்.
"திரு அருட்பா நூலின் மூலமாக பல கருத்துக்கள் இந்த மண்ணுக்கு பயன் வந்ததா?" என்று எண்ணிப் பார்த்து ,அது கூட இல்லை என்று நினைத்து உடனே ஒரு முடிவு எடுத்தார் "நான் கடை விரித்தேன். கொள்வாரில்லை .சுருட்டிக் கொண்டேன்" என்று முடிவுசெய்து ஒரு நாள் தனது அறைக்குள் சென்றவர் இறையோடு கலந்தார் .இன்றுவரை அவர் வருவார் என்ற நம்பிக்கையோடு பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..
பொதுவாக, திருஅருட்பிரகாச வள்ளலார், பிறருக்கு உணவு தருவதை வாழ்வில் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார் .அவர் ஏற்றிய அடுப்பிலே இன்றுவரை உணவு சமைத்து, வருகிற அனைவருக்கும் அன்னதானம் அளித்து வருவது வடலூர் அதிசயம் !
அன்பர்களே, வாழ்க்கையிலே நாம் எப்படி வாழ்ந்தால் உயர முடியும் என்பதை சொல்லி, "அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வதே பெருமை " என்பதை உணர்த்தி, நம்மோடு இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் ராமலிங்க சுவாமிகள் என்று அழைக்கப்படும் திரு அருட்பிரகாச வள்ளலார் திருவடியை போற்றி மகிழ்வோம்... வணங்குவோம்.
..............................
நன்று.வள்ளலார் வழி நடப்போம்.
பதிலளிநீக்குகருத்துரையிடுக