இலவச ஆலோசனை அரங்கம்-6

www.nellaikavinesan.com வழங்கும்
இலவச ஆலோசனை அரங்கம்-6


10ம்வகுப்பு படிக்கும் 
மாணவ ,மாணவிகளுக்கு
 ஓர் அருமையான வாய்ப்பு


 பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள்.
  உங்களுக்கு விளக்கம் சொல்வதற்கு தயாராக இருக்கிறார், அனுபவமிக்க சமூக  அறிவியல் ஆசிரியர் முனைவர்.ஆதலையூர் சூரியகுமார். 
 பல ஆண்டுகள் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு சமூக அறிவியல் பாடத்தில் சிறப்பு பயிற்சி வழங்கிய முனைவர்.ஆதலையூர் சூரியகுமார் அவர்கள் ,உங்கள் கேள்விகளுக்கு உடனே பதில் வழங்க காத்திருக்கிறார்.
 நெல்லைகவிநேசன் டாட். காம் (www.nellaikavinesan.com) இந்த சேவையை இலவசமாக வழங்குகிறது.
 ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் தேவையான விளக்கங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.

அலைபேசி எண்கள்9865402603 ,9344674063

தொடர்பு கொள்ள வேண்டிய நேரம்:

19.5.2020  -  செவ்வாய்க்கிழமை  -காலை 10 மணி முதல் 11 மணி வரை
              (சமூக அறிவியல் தேர்வு ஆர்வமூட்டல் -பொதுத்தேர்வு குறிப்புகள்)  
20.5.2020  -  புதன்கிழமை              - மாலை 5 மணி முதல் 6 மணி வரை
                              (சமூக அறிவியல் பாட முக்கிய குறிப்புகள்)
21.5.2020  -   வியாழக்கிழமை      -காலை 10 மணி முதல் 11 மணி வரை
                       (சமூக அறிவியல் பாட குறிப்புகள்)



முனைவர்.ஆதலையூர் சூரியகுமார். 

மதுரை மாவட்டம், மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக தனது அரசுப் பணியைத் தொடங்கியவர். முன்னதாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சில பெயர் பெற்ற மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியராகவும், துணை முதல்வராகவும், முதல்வராகவும் பணிபுரிந்தவர். தற்போது திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி, அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

ஆண்டு பொதுத்தேர்வுகளில் பல மாணவர்களை நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க வைத்தவர்.  கல்வி சார்ந்த சமூகம் சார்ந்தும் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.  மருத்துவ நுழைவு தேர்வு (நீட்  தேர்வு), ஆண்டு பொதுத்தேர்வு, உள்ளிட்ட பல தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் குறுந்தகடுகளை வெளியிட்டிருக்கிறார். மேலும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பாட சம்பந்தமான குறுந்தகடுகளையும் வெளியிட்டு வருகிறார். 

இவருடைய பணிகளைப் பாராட்டி தமிழக அரசு இவருக்கு 'கனவு ஆசிரியர்' விருது வழங்கி கௌரவித்து இருக்கிறது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் 'திருக்குறள் விழிப்புணர்வு விருது' புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'புதிய தலைமுறை ஆசிரியர்' விருது தினமலர் நாளிதழின் லட்சிய ஆசிரியர் விருது, இந்து தமிழ் நாளிதழ் வழங்கிய அன்பாசிரியர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார். தமிழ் வார மாத இதழ்களில் சமூகம் பொருளாதாரம் கல்வி சார்ந்த கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதி வருகிறார். இவர் எழுதிய பல சிறுகதைகள் கவிதைகள் இதுவரை பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.

                                          ..................................................


                          

Post a Comment

புதியது பழையவை