மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா-11


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா-11
சித்திரைத் திருவிழா தத்துவங்கள்
-திருமிகு.மதுரை .சண்முக திருக்குமரன் அவர்கள்

.
                            

பதினோராம்  நாள்....

                            தேர்த் திருவிழா ......
புலவர். சாவித்திரி பாலசுப்பிரமணியன்.

    அம்மையப்பனின் திருக்கல்யாணம் முடிந்து  தெய்வங்கள் ஆனந்தமாக பூப்பல்லக்கில் வலம்வந்தது காண்போரை  மகிழ்வித்தது.
   பதினோராம்நாளில் இருவரும் தேரில் ஏறி மதுரையை வலம் வந்து அருள்புரியும் அற்புதக்காட்சி இப்பிறவியில் நமக்குக்கிடைத்த பாக்கியம். தேர்த்திருவிழா ஒற்றுமையை  வளர்க்கும் ஓர் அற்புதத்திருவிழா. உயர்ந்தவர்,தாழ்ந்தவர்  என்ற ஜாதி மத வேறுபாடு இல்லாமல் பங்கு கொள்ள வைக்கும் விழா.
          இங்கு இரண்டு தேர்கள்உண்டு.ஒன்றில் அம்மையப்பனும்,மற்றொன்றில் அம்பிகையும் ஆரோகணித்துவரும் அற்புதத் தேர்களாக உள்ளன.அம்மையப்பன் வரும் தேர் பெரியது.இதை ஐந்துபிரிவுகளாகப் பிரிக்கலாம் .முதல் பிரிவில்,பூதகணங்களின் மரச்சிற்பங்களையும் ,இரண்டாம் பிரிவில் யாளி மற்றும் சிறுஉருவ தெய் வங்களும் ,மூன்றாம் பிரிவில் சிவபுராண சிற்பங்கள், திருவிளையாடற்புராண சிற்பங்களும் ,நான்கு ஐந்து ஆகிய பிரிவுகளில் நடன உருவங்கள் கோலாட்டம் போன்ற சிற்பங்களையும் காணலாம்.
        பதினோராம் நாளில் நடைபெறும் தேர்த்திருவிழா இறைவனின் சங்ஹாரம்,(மறைத்தல், அருளல்) குறித்து நடைபெறுவதாகவும். இது ஆன்மாக்களுக்கு உயர்வுநல்கி வருவதையும் குறிக்கும்.இதன் அமைப்பு  அண்டபிண்டத்துக்கு சமம். இஃது எட்டு அடுக்குகளாக அமைந்த விசுவ விராட் சொரூபமாகும் .உச்சியில் இருக்கும் கும்பம் ,சோட சாந்தம்,அதற்கடுத்த கீழடுக்கு துவாதசாந்தம்.அதற்கடுத்தது மஸ்தக அதிஸ்தானம் .அதன்பின் வருவது மஸ்தகமத்யஸ்தானம்.அதற்கடுத்து மஸ்தக அந்தஸ்தானம். அடுத்ததாக வருவது புருவ மத்தியஸ்தானம்.நடுவில் தாங்கும் குத்துக் கால்கள் தத்துவக் கால்கள்.முன் மூன்றுதுறைகள்  மூன்று கண்களாகும். பின்னவை  சிகையும், இடது,வலது காதுகளாகும். அப்பன் எழுந்தருளியிருக்கும் கேடயபீடம்  முப்பாழ்(மாயைப்பாழ், போதப்பாழ்,உபசாந்தப்பாழ்). குதிரைகள் சூரிய,சந்திரக்கலைகள்.,சாரதி அக்னிகலை.இவை நாசியாகும்.
        அடுத்த அடுக்கு கண்டஸ்தானம்.,அதனையடுத்து இருதய ஸ்தானம் .அதன்பின் வரும்ஸ்தானம் நாபி. அதையடுத்து வருவது குண்டலிஸ்தானம்.பத்து சக்கரங்கள் தச வாயுக்கள். இறைவன் இதற்குத் தான் ஒருவனே கர்த்தா என்று உணர்த்தி,இவ்வாறு அமைந்த பிண்டத்துவ சரீரமாகிய ரதத்தில் தசவாயுக்கள் எனப்படும் சக்கரங்களை நிறுத்தி ,அசைவற்ற மனத்தை உந்தி குண்டலியிலிருந்து நாபிக்கும்,அதிலிருந்து கண்டத்திற்கும், அதிலிருந்து வாயுக்கும் ஏற்றி,இலயப்படுத்தி,முறையே ரதக்குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து கண் வழியாகவும், நடுவழியாகவும் மேல் நோக்கி ஆறாம் அடுக்காகிய புருவ மத்திக்கும் ஏற்றி ,இலயப்பட்டு, சும்மா இருந்தபடி இருக்கும் நித்திய சுகியாய் இருந்திடல் வேண்டும் என்ற இயக் கிரமத்தைக் காட்டுகின்றது.
  போழொத்த வெண்மதியம் சூடிப்  பொலிந்திலங்க.......
...................
ஆழித்தேர்  வித்தகனை நான் கண்டது ஆரூரே.. என்னும் தேவாரப்பாடல் இந்தத் தேரோட்டத்தை விளக்குகின்றது....
         
   மேலும் ,தேர் திரிபுராதிகளை சிவன் சிரித்து,எரித்து ஆன்மக்கோடிகளைக் காப்பாற்றிய ஸ்திதி தொழிலுக்கும் அறிகுறியாகும் என்ற தத்துவப்பலனை நமக்கு விளக்குகிறது. காலை  சுப நேரத்தில் ஆராதனைகள் காட்டப்பட்டு,பின் ஆலயத்திலிருந்து வந்து இரதத்தில் அமர,மக்கள் வடம் பிடித்துத் தேரை இழுக்க  ஆரம்பிப்பர்.அதன்பின் நான்கு மாசிவீதிகள் 
சுற்றிவரும்  தேரையும்,அதன் உள்  வீற்றிருக்கும் அம்மையப்பனையும் ஏதேனும் ஓரிடத்தில் மக்கள் தரிசித்து ஆனந்தம்கொள்வர்.சோம சுந்தரர்,மீனாட்சி சுந்தரர் என்றும்,ஹர ஹர சுந்தர மஹாதேவா, மீனாட்சிசுந்தர மஹாதேவா என றும் வடம்பிடித்திழுக்கும்போது கூவி மகிழ்வர். பின் நான்கு மாசி வீதிகள் வழியாக தேர் சுற்றி தேர்நிலைக்கு வந்தவுடன் தீபாராதனைகாட்டி பின் ஆலயத்திற்கு தெய்வங்களைக் கொண்டு செல்வர்.     
     கோவிலுக்குள் ம.முத்தம்பல முதலியார், இராமநாதபுர சேதுபதி மகாராஜாஆகியவர்களின்மண்டகப்படிகளை அன்று ஏற்பார்.இரவு 7 மணி சுமாருக்கு தேர்தடம் பார்க்க சப்தாவர்ணசப்பரத்தில் தெய்வங்களை வைத்து நான்கு மாசி வீதிகளைச் சுற்றி வந்து ஆலயத்தை வந்தடையும்.பின்அங்கு தீபாராதனை காட்டப்பட்டபின் தேர்திருவிழா நிறைவு பெறும்

. சித்திரைப்.......... பெருவிழா தொடரும்.



Post a Comment

புதியது பழையவை

Sports News