ஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-15



எங்கள் வீட்டுக்குக் 
"கடவுள் வந்திருந்தார்".....!

(யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...நம்பாதவங்க….’கடவுள் மாதிரி’ வந்தார்ன்னு வாசிக்கலாம்)

டேக் லெஃப்ட்…இன் ஃபைவ் ஹண்ட்ரெட் மீட்டர்ஸ் இன் ‘நாக்க்கப்ப்ப் பட்ட்டீணம் சால்லை’ என்னும் வெளிநாட்டு மேப்புக்கார யுவதியின் குரலுதவி இல்லாமல்…
கிண்டி கிராஸிங்… …..நியரிங் ஏர்போர்ட்.. என்னும் லைவ் அப்டேட்…டெக்ஸ்டிங் அன் வாய்ஸ் மெசேஜ் …மேப் ஷேரிங் என ’செல்போன் என்னும் கையடக்க கிருமி ஸாரி..கருவி’ எல்லோர் கைகளிலும் பரவாத காலம்– (2003 நவம்பர்) 
முன்தகவல் ஏதுமின்றி…. இரவு 7 மணி அளவில்…
நம் எல்லோருடைய ஆதர்ச நாயகர் சுஜாதா அவர்கள் தம்பதி சகிதம் உங்கள் வீட்டுக்கு ஒரு விழா நாளில் நேரில் வந்தால் எப்படியிருக்கும்...GUESSS!


YES…ஒரு ரியல்ல்ல்ல்ல்…ஷாக்.க் க் !
எனக்கும் என் உறவினர் கூட்டத்திற்கும் ஒருவித ’இன்ப அதிர்ச்சி’! 

வெயிட்ட்ட்டீஸ்!
டவுசர் நாட்களில்.. கிர்ர்க்க்கு...கிர்ர்க்க்கென்று கட்டிங் மெஷின்.. தலைல ஊர்ந்து வந்து கடைசி நாலு முடியை உயிரோடு கொத்தா களையெடுக்கும். அந்த வலிமிகு நொடி  நெனைச்சாலே வலிக்கும்! அப்படியான ஒரு சண்டே ’ஜல..வியூ’.. அவுட் ஆஃப் போகஸ்லயும், ஐசோலேஷன் அவசியப்படாத நெருக்கத்தில் க்ளோசப் ‘காவிப்பல்…சுப்பையா சலூன்ல…(’பய…) புள்ளிங்கோ…வரிசையில வெயிட்டிங்ஸ்…! 



ஷேவிங் கிரீம் தடவ வளைத்த சைக்கிள் போக்ஸ் கம்பியில் குத்திக்கிழிந்து தலைகீழா..பாதியா தொங்கும் கன்னித்தீவுசிந்துபாத் தொடரும்… கண்ணில் பட்டு,,
இராங்கியம் கிராமத்துப் பால்யத்தில்…பாடப் புத்தகங்களைத் தாண்டி… கதை படிக்கும்…ஆர்வத்தைத் தீட்டியது.. (B/W காலப் படக்கதை… இன்று வண்ணத்திலும் உயிர்ப்புடன் தொடர்வது தினத்தந்திக்குப் பெருமைமிகு அடயாளம்!) 
வலிமிகு…முடிவெட்டக் காத்திருக்கும் வேதனையோடு…அந்தக் கூரைவேய்ந்த சுண்ணாம்புக் காரைச் சுவரில் வெளிவந்து சில வருடங்களேயான அரசகட்டளை மற்றும்…கந்தன் கருணை படத்து போஸ்டர்களில்… இன்னும் பைசல் ஆகாத சில டவுட்ஸ்… 
டவுட் நம்பர் 1: ஒரு பேப்பரோ.. புத்தகமோ, தெரியாமக் காலில் பட்ட ஒடனே  ஃபைப்ரோசிஸ் மாதிரி கண்ணுக்குத் தெரியாத ஒரு வஸ்து மூளைக்குள் பரவி அனிச்சையாய் தொட்டுக் கன்னத்தில் போட்டுக்கும் 70s மாடல் நம்ளுது! எழுத்தை சரஸ்வதியா நெனைச்சு வளர்ந்த டி.என்.ஏ’! அரசகட்டளை (பட போஸ்டர்)… எழுத்துருமேல எம்ஜிஆர். வளைந்த ஷூ கால்களுடன் எப்டி.நிக்கலாம்…என பால்யத்தில் எம்ஜிஆர் மேல் உள்ளூர ’ஒரு’ வருத்தம்!


டவுட் நம்பர் 2: … ’கந்தன் கருணை போஸ்டர்’ல சிவனாக வரும் சிவாஜி தலைக்கிரீடம் வழக்கமான கிரீடம் மாதிரி இல்லாது வேற ஷேப்ல சைடுல’றெக்கை’ மாதிரி வரும்…அது யாரு ஐடியாவோ! ஜடாமுடி சிக்காம எப்டி கழட்டி மாட்டுவாருன்னு அதீத கவலை! (அதுக்காக…இப்போ உள்ள எம்ஜிஆர் சமாதி குதிரை றெக்கையை நெனைச்சுக் கொழப்பிக்க வேண்டாம்!)


70 களில்.
பாடப் புத்தகங்கள் தாண்டி.. …கன்னித்தீவு…குரங்குக் குசாலா… ராணி முத்து புதிர்ப்போட்டி.. அம்புலிமாமா- வேதாளம் சொன்ன கதை… கபிஷ் கலாட்டா…கோகுலம், இரும்புக்கை மாயாவியைத் தொடர்ந்து…வார இதழ்களில்
வாண்டுமாமாவின் சிலையைத் தேடி ’கிட்ஸ் அட்வென்ச்சர்’ படக்கதை… 
தினமணிக்கதிர்… ‘முழங்கை சுருள்முடி’ தாமெரியோ, ஓவியர் செல்லம் வரைந்த படக்கதை..நிற்க. மறுபக்கம் ’சொர்க்கத்தீவு’ என்னும் சுஜாதா தொடர்கதை.. தொட்டதும் விடாமல் வைரலாகப் பற்றியது... கடைசி அத்தியாயத்தின் கடைசிச் ’சொட்டு’ வரை மறக்கமுடியாத மனசெங்கும் பரவியது முகமறியா சுஜாதா அணுக்கள்!


80 களில்
’பாசஞ்சர் போனால் போகிறது என திருநிலத்தில் நின்றது’… என முதல் வரியிலேயே
’சுஸ்த்’ ஆகும்படி.. வாராவாரம் ’கரையெல்லாம் செண்பகப்பூ தொடரில் சுஜாதாவும், ஓவியர் ஜெ… கோடுகளும் இணைந்து… பட்ட காயத்த்த்துலே மறுபடி ‘வெள்ளி’ என்னும் வெகுளி கேரக்டர் ’கல்லெடுத்து எறிஞ்சது போல’…பயாஸ்கோப்பு காட்டி ஈர்ப்பு திசையில் வென்றார்! பிரதாப் போத்தனும் ’வெள்ளி’யாக ஸ்ரீபிரியாவும் நெனைச்சா மாதிரி அந்தக் கதைல ஒட்டலை!… 


80 களின் மத்தியில்
சைன் போர்டு வேலைக்களுக்கிடையில் (திருச்சி ஆண்டாள் தெரு) ஒரு லெண்டிங் லைப்ரரியில் படித்த குமுதத்துலேர்ந்து கிழித்து பைண்ட் செய்த ’நைலான் கயிறு ' நாவலில் கிழே இறங்கினான் என்பதை வரிக்கு ஒரு எழுத்தாக 
 
     
          ங்
                கி
                    னா
                            ன் 
என்று படித்தவர்கள் எல்லோரது கண்கள் அந்த வரிகளின் வழியே பல முறை  இறங்கவைத்து கிறங்கவைத்தார் என்பது ரகசிய உண்மை!


இப்படி புத்தகங்களில் மட்டுமே பார்த்துக் கொண்டாடப்பட்டவர்
தம்பதி சகிதம் எங்கள் புது விட்டுக்குள் நுழைந்தபோது உறவினர் யாவரும் இன்ப அதிர்ச்சியில் கிறங்கியதை ’ஸ்டேட்டஸ்’ல போட இயலாத கையறு காலம் அது! 

அதிகாலை 3 மணியிலிருந்து கிரகப்பிரவேச டென்ஷன்... புது இடம் ...மிரளும் பசுவும் கன்றும் கோமியம்...ஹோமப்புகை... ஊரிலிருந்து சொந்த பந்தம்... நட்பு வட்டம் ... ஊருக்கு திரும்ப பஸ்,..டிக்கட் குளறுபடிகள் .. பத்திரிகை கொடுத்து வந்தவர்கள், வராதவர்களின் போன் கால்...பத்து நிமிடத்து ஒருமுறை தாழப் பறக்கும் விமானங்கள்... பிளைட் சத்தத்திற்கு இணையாக சத்தம் போட்டுக்கொண்டு விட்டுக்கு வெளியில் சாலையில் ஓடிவிளையாடும் குழந்தைகள் ...அன்றே கிளம்ப இருந்த சிலரை தங்க வைக்க அவர்கள் குழந்தைகளுக்கு 'மெரினா பீச் ஆசை' காட்டி.. ....இப்படியாக மாலை நேரத்தையும் இரவையும் வானம் லீனியர் விக்னெட் கிரேடியண்டில் ...ஒரு நியூ ட்ரான்ஸ்பாரண்ட்டா லேயர் செட்டான நேரம் அது....

பொழிச்சலூரின் அந்த வீதியில் இருள்மாலை நேரத்தை வெளிச்சமாக்கியபடி கருநீல நிற ஸ்கோர்ப்பியோ… ஒரு ’பால் பாக்கெட்’ போல அசைவு கொடுத்து நின்றது. கையில் வழி சொல்லும் ஒரு வரைபடம் இணைத்து நான் டிசைன் செய்த அழைப்பிதழுடன் தம்பதி சமேதரராக பிரசன்னமானர் வாத்யார் சுஜாதா சார்! சொந்த வீடு வாங்கியதை விட அதிக சந்தோஷமான ஒரு தருணம் அது....


இன்விட்டேஷனில் கதவு திறப்பதுபோல நான் செய்த வடிவமைப்பில் உள்ள செட்டிநாட்டு கதவுகள் அவரது ஸ்ரீரங்கம் ஏரியா கதவுகளை ஞாபகப்படுத்தியது என்றார்… பின் பக்கம் வரைபடத்தையும், (திரு.முத்துநெடுமாறன்)-முரசு அஞ்சல்க்காக
என் மகள் பெயரில் வடிவமைத்த ’சிந்து’ எழுத்துரு மிக அழகு என்றார். 
(மோதிரக் கையால் மயிலிறகு மசாஜ்)  
’புதுமனை புகுவிழா’ என நீங்கள் பார்க்கும் எழுத்துரு- 2001 லேயே நான் வடிவமைத்து. தற்போது 20 வருடங்கள் தாண்டி TAU-Nilavu என்ற பெயரில் இலவசத் தரவிறக்கம் செய்து யூனிக்கோட் முறையில் தட்டச்சு செய்த வார்த்தைப் பனுவல்களின் தலைப்புகளுக்குப் பாவிக்கலாம்…அவ்வளவு ‘உத்தமமாக’ இருக்கும்! நான் வடிவமைத்த 50 வகை எழுத்துருக்களை தமிழக அரசு ஆதரவு தமிழ்நாடு இணையக்கல்விக் கழக வலைத்தளத்தில் http://www.tamilvu.org/en/Tamil-Keyboard-interfaces-fonts  சொடுக்கி அல்லது படத்தில் உள்ள கியூ ஆர்.கோடு (QR Code) ஸ்கேன் செய்து.. DOWNLOAD & INSTALL செய்து இன்புற்று மகிழலாம்! (அதற்காக திரு.உதயசந்திரன், திருமதி. தனலெட்சுமி கிரிhttps://www.facebook.com/dhanalakshmi.giri.1 மற்றும் டி.வி.ஏ.ஊழியர்களுக்கும்.. திரு.முத்துநெடுமாறன், https://www.facebook.com/muthu.nedumaran திரு நாகராசன் கே.எஸ். https://www.facebook.com/mrnags மற்றும் திரு.கார்த்திகேயன்https://www.facebook.com/karthikeyan221, அழகப்பன்https://www.facebook.com/ala.ghar.5 ஆகியோர்க்கு மீண்டும் என் நன்றி!..     
முகூர்த்த நொடியில் செல்போன் கைகள் யாவும் திடீர்ன்னு ஒரே நேரத்தில் கேமராமேனாக + வுமனாகவும் மாறி படையெடுப்பது.. இந்தக் கொரோனாவால் அடங்கியது. அப்போ ...20 வருடத்திற்கு முன் எல்லோர் கையிலும் மொபைல் இல்லை.  'ரிலையன்ஸ்' புண்ணியத்தில் சிலபேர் 'கெத்துக்காக மொபைல் போன் வைத்திருந்தார்கள். அதுக்குள்ள கேமரா எனும் வஸ்து’ சேர்ந்துக்கும் என எண்ணிப் பார்க்காத காலம்! கேமரா யாவும் டிஜிட்டல் மயம். பிலிம் ரோல் லேது. டெவலப்பிங் என்ற வார்த்தையே லேது. அந்த சமயத்தில் மாமா ஸ்டுடியோக்காரர் என்பதால் கிடைத்த.. மறக்க முடியாத புகைப்படங்கள் இவை.. 


சித்த யோகமும் தெய்வ கணமும் பொருந்திய அந்த ஓரிரு மணி நேரத்துக்குப பிறகு அவர் காரிலேயே பல்லாவரம் மவுண்ட் ரோடு வரை சென்று வழியனுப்பிவிட்டு ... தம்பதி சகிதம் சுஜாதா சார். அன்று எனக்காக 20+20 கிலோமீட்டர்கள் வந்துபோன விஷயத்தை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல்... 2020ல் இப்பதிவில் மனசு மறுபடியும் கணேஷ் போல…ஜிவ்வ்வ்வ்வ்வ்!


இந்த மாதம்…மே-3 சுஜாதா பிறந்தநாள்…
அவர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்கள் எல்லோருடன் அளவளாவியது நினைத்தாலே
மனசெல்லாம் செண்பகப்பூ… அவர் நினைவில்…இப்போது எங்கள் வீட்டில் ஒரு செண்பக மரம் கிளிப்பச்சை கலரில் இலை பரப்பி வளர்கிறது!..பூக்குட்டி நாவல் போல வெயிட்ட்ட்ட்டிங்கி!

வாத்யார் நல்லாசிகள் வேண்டி.
…தொடர்வேன்!   


2 கருத்துகள்

  1. எங்கள் மனெமெல்லாம் செண்பகப் பூ வாசம் பரப்பிய உன் எழுத்துத்தாவரம்..வளர்ந்து நிறம் மாறி மாறி இறுதியில் பூத்துக்குழுங்கி மீண்டும் விதையாகி....விருட்சமாக வளர....வாழ்த்துகிறேன் நெஞ்சார

    பதிலளிநீக்கு
  2. எனக்கு சுஜாதாவை கதைகளை விட சுஜாதா பற்றி படிப்பதில் ஒரு அலாதி சுகம் ஒரு வெறியை என்றே சொல்லலாம். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News